Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குரு புஷ்ய யோகத்தால் புத்தாண்டின் தொடக்கத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Guru Pushya Yoga Nakshatra 2023: தற்போது நாம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். அதுவும் டிசம்பர் மாதத்தின் இறுதியில் மிகவும் மங்களகரமான யோகம் உருவாகிறது. அது தான் குரு புஷ்ய யோகம். இந்த யோகமானது நல்ல வெற்றியைத் தருவதோடு, பண வரவை அதிகரிப்பதாக கூறுப்படுகிறது. குரு புஷ்ய யோக காலத்தில் ஒருவர் ஷாப்பிங் செய்வது அல்லது ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவது நல்லதாக கருதப்படுகிறது. முக்கியமாக இக்காலத்தில் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
இப்படிப்பட்ட குரு புஷ்ய யோகம் டிசம்பர் 29 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 30 ஆம் தேதி முடிவடைகிறது. இப்படி உருவாகும் குரு புஷ்ய யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலத்தில் நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

சொல்லப்போனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளும், பணமும் குவியும். இதனால் புத்தாண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது குரு புஷ்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு புஷ்ய யோகமானது நல்ல பலன்களை வழங்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை வழங்கப்படலாம். மேலும் உங்களின் பணி நல்ல பாராட்டைப் பெறும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஒப்பந்தம், இக்காலத்தில் உறுதியாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு புஷ்ய யோகமானது சிறப்பாக இருக்கும். புதிய வருமானங்களைப் பெறக்கூடும். வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். சிலர் புதிய சொத்துக்கள், வாகனம், வீடு போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். நிறைய செல்வத்தை சேமிக்க முடியும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு புஷ்ய யோகத்தால் புத்தாண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கப் போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் அலுலகத்தில் நலல பலன்களைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் பதவி உயர்வைப் பெறலாம். குழந்தைகளிடம் இருந்து சிலர் நல்ல செய்திகளைப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications