Latest Updates
-
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும் -
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்.. -
தலையணையில் உள்ள மஞ்சள் நிற கறைகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது... உங்க ராசியும் இதுல இருக்கா?
Guru Peyarchi 2024: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களிலேயே சனி மற்றும் ராகு கேதுவிற்கு அடுத்ததாக நீண்ட காலம் ஒரு ராசியில் பயணிக்கக்கூடியவர் குரு என்பதால், குருவின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் குரு பெயர்ச்சியானது வளர்ச்சி, முன்னேற்றம், காதல் வாழ்க்கை, ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தைகள் ஆகியவற்றில் காணப்படும்.
தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 01 ம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார். ரிஷப ராசியில் குரு நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது 2024 குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சிக்கு பின் தங்கள் வாழ்க்கையில் வெற்றியுடன், முன்னேற்றத்தையும் பெறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். மே மாதத்திற்கு பின் முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் எங்கு முதலீடு செய்வதாக இருந்தாலும், நன்கு யோசித்த பின்னரே செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நிதி இழப்பை தவிர்க்கலாம்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் பந்தய சந்தையில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். பணத்தை முதலீடு செய்வதற்கு பதிலாக சேமிக்க முயற்சிக்க வேண்டும். இதனால் நிதி நிலைமை மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் உயரும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் பணம் தொடர்பான விஷயங்களில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற வேண்டும். இப்படி செய்தால் நிதி நிலையை வலுப்படுத்த முடியும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஏற்கனவே எங்கேனும் முதலீடுகளை செய்திருந்தால், மே முதல் நல்ல வருமானத்தைப் பெறக்கூடும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எதிர்பாராத திடீர் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக, உங்கள் நிலை வலுவடையும். ஆனால் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
