Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
குரு பெயர்ச்சி 2024: மே முதல் அடுத்த ஒரு வருடம் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Guru Peyarchi 2024: நவகிரகங்களில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவற்றின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்த கிரகங்கள் ஒரு ராசியில் ஒரு வருடத்திற்கு மேலாக பயணிக்கும். இதனால் இந்த கிரகங்களின் ராசி மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் சனி மற்றும் ராகு கேது கிரகங்களின் நிலைகளில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. ஆனால் குரு பகவான் மே மாதத்தில் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் மேஷ ராசியில் இருந்து சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் மே 1 ஆம் தேதி செல்லவுள்ளார். ரிஷப ராசிக்குள் குரு பகவான் செல்வதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள்.

குறிப்பாக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையவுள்ளது. நிதி நிலையில் உயர்வு ஏற்படவுள்ளது மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த ராசிக்காரர்களின் வேலைகள் முடிவடையும் மற்றும் நிதி நிலை எதிர்பாராத அளவில் முன்னேற்றமடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
பேச்சால் உங்களைச் சுற்றியிருப்பவர்களை ஈர்த்து, அனைவருக்கும் பிடித்தவராக இருப்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதை மே மாதத்திற்கு பின் தொடங்கினால் குருவின் அருளால் அந்த வேலை வெற்றிகரமாக நடக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் உங்களின் நீண்ட நாள் இலக்கை அடைவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் கௌரவமும், அந்தஸ்தும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள்.
கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைக் காணலாம். நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். உங்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை மாற்றுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். மேலும் குரு பெயர்ச்சிக்கு பின் நவபஞ்ச யோகம் உருவாவதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக வெற்றிகள் குவியும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications