Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
12 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் குருவால் அடுத்த 1 வருடம் இந்த ராசிகளுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Guru Peyarchi 2023: நவகிரகங்களில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகம் ஆகும். இந்த குரு ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். குரு பகவான் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசியில் இருந்து விலகி மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைகிறார்.
அதுவும் இந்த மேஷ ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் வருகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் அவர் தொழிலில் நல்ல உயர்வை/முன்னேற்றத்தைக் காண்பதோடு, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மற்றும் நிதி நிலையும் வலுவாக இருக்கும். குரு பகவான் ராசியை மாற்றும் போது, மேஷ ராசியில் ஏற்கனவே ராகு இருப்பதால், ராகுவுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை உருவாக்குவார். இந்த யோகமானது அக்டோபர் 30 வரை இருக்கும்.

இது தவிர குரு பகவான் 2023 செப்டம்பர் 09 ஆம் தேதி வக்ரமாகி, டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் மீண்டும் பயணிக்க ஆரம்பிப்பார். இப்படி இந்த ஆண்டு முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் பயணிக்கவுள்ளார். இப்போது மேஷ ராசிக்கு செல்லும் குரு பகவானால் அடுத்த ஒரு ஆண்டு காலம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் பல எதிர்பாராத முடிவுகளை சந்திக்க நேரிடும். அடுத்த ஒரு ஆண்டு காலம் மிகவும் பிடிவாதமாக இருப்பீர்கள். இக்காலத்தில் நீங்கள் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். பணியிடத்தில் மரியாதை மற்றும் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். ஆனால் உங்களின் பணியில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் அதிக செலவுகளையும், அலைச்சல்களையும் சந்திக்க நேரிடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து ஒருசில கெட்ட செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியை காண அதிகம் முயற்சி செய்ய வேண்டும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு இனிமேல் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதோடு, கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசின் முழு ஒத்துழைப்பு இக்காலத்தில் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் விஷயங்களில் தீவிரம் இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் குருவின் அருளால் பல எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் உறவை சிறப்பாக பேண முயற்சிக்க வேண்டும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இனிமேல் நல்ல அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். எடுக்கும் முடிவுகள் மற்றும் செய்யும் வேலைகளில் நல்ல பாராட்டுகள் கிடைக்கும். இக்காலகட்டத்தில் தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்ககும். வெளிநாடு செல்ல விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகளை பேசி தீர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க இன்னும் சில காலம் ஆகும். திருமண வாழ்வில் மனக்கசப்பு ஏற்படவிடாதீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். எனவே கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலம் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் திட்டங்களை இக்காலத்தில் ரகசியமாக வைத்து செயல்படுத்தினால், நல்ல வெற்றியைக் காணலாம். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை வீழ்த்த சதி செய்வார்கள். எனவே யாரையும் நம்பாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிக்க வெளியூர்/வெளிநாடு செல்ல விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் இருந்தாலும், ரகசிய எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கடன் வாங்குவது/கொடுப்பதில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் சிறப்பான வெற்றிகளைக் காணப் போகிறார்கள். மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், இக்காலத்தில் அதில் வெற்றி கிடைக்கும். குழந்தை தொடர்பான கவலைகள் தீரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுபெறும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. ஆயினும் ஒருசில வெற்றிகள் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் குடும்பத்தில் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து கெட்ட செய்திகளைப் பெறலாம். பெரிய வேலைகளை செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலம் சாதாரணமாக இருக்கும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற உங்களின் ஆசை இக்காலத்தில் நிறைவேறும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகளும், செய்யும் வேலைகளிலும் நல்ல பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் குரு பகவான் எதிர்பாராத இனிமையான பலன்களை வழங்குவார். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களின் பேச்சுத் திறமையால் பாதகமான சூழ்நிலையையும் எளிதில் சமாளித்து வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சதியால் பலியாவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு வரவேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications