Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
குரு அஸ்தமனம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
Guru Asta 2024: ஜோதிடத்தில் மகிழ்ச்சி, செழிப்பு, திருமணம், அறிவு, குழந்தைகள், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் குரு. இந்த குரு தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தேவர்களின் குருவான குரு பகவான் மே 01 ஆம் தேதி தான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார். ரிஷப ராசியில் நுழைந்த 2 நாட்களிலேயே குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். கிரகங்கள் அஸ்தமனமாகும் போது, அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தடைபடும்.
பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் தடைகள், சிக்கல்கள், நிதி பிரச்சனைகள், திருமண வாழ்வில் பிரச்சனை, உறவுகளில் விரிசல் போன்றவற்றை சந்திக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது ரிஷப ராசியில் அஸ்தமனமாகும் குருவால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் எதிரிகள் அதிகரிக்கலாம். உங்களுக்கு எதிராக நிறைய பேர் சதி செய்வார்கள். பயணத்தின் போது அல்லது வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலைகளில் பலவிதமான தடைகளை சந்திப்பீர்கள். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். முடிவெடுக்க முடியாமல் அவதிப்படுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் சம்பந்தமாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடன் வேலை செய்வோருடன் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி நிலை மோசமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் சோம்பேறித்தனம் அதிகரிக்கும். இதனால் ஒவ்வொரு வேலையையும் தள்ளிப் போடுவீர்கள். பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சுற்றியிருப்பவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள். வியாபாரிகள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். தேவையற்ற பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications