Latest Updates
-
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
இந்த 4 ராசிக்கார பெண்கள் அவங்க கணவனுக்கு அதிர்ஷ்ட தேவதைகளாம்.. உங்க மனைவியின் ராசியும் இதுல இருக்கா?
Girls Of These Zodiac Signs Are Lucky For Husband In Tamil: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அதிபதிகள் உள்ளன. இந்த அதிபதிகளைக் கொண்டு தான், அந்த ராசியை சேர்ந்தவர்களின் குணாதிசயங்கள் ஜோதிடத்தில் கணித்து கூறப்படுகின்றன. அதனால் தான் ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும் வித்தியாசமாக உள்ளன.
சில வீடுகளில் குழந்தைகள் பிறந்த பின்னர் தான் அந்த வீட்டில் உள்ளோர் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டிருப்பார்கள். இதற்கு காரணம் அந்த குழந்தை பிறக்கும் போது கிரகங்கள் இருந்த நிலைகளும், அந்த குழந்தையின் ராசியும் தான்.

அதுவும் சில ராசியை சேர்ந்த பெண்கள் அவர்களின் பிறந்த வீட்டிற்கு மட்டுமின்றி புகுந்த வீட்டிற்கும் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அதாவது அந்த பெண் வந்த பின்னர் தான் அந்த வீட்டில் உள்ளோர் அனைத்து விதமான செல்வத்தையும், வசதிகளையும் பெறுகிறார்கள். இப்போது எந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் அவர்களின் கணவருக்கு அதிர்ஷ்டசாலியாக உள்ளார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஒவ்வொரு வேலையையும் முழு ஆர்வத்துடனும் செய்வார்கள். செவ்வாயின் தாக்கம் கொண்ட பெண்கள் மிகவும் தைரியசாலிகள். இயற்கையாகவே இவர்கள் அனைவருக்கும் எளிதில் செல்லமாகிவிடுவார்கள். இவர்கள் செல்லும் இடங்களில் சுபகாரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. முக்கியமாக இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் அவர்களின் கணவருக்கும், மாமியாருக்கும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். தங்கள் பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பார்கள். தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். மிகவும் அக்கறையுள்ளவர்கள். தங்கள் குடும்ப உறுப்பினர்களை முடிந்த வரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் மற்றும் புத்திசாலிகள். இந்த ராசிப் பெண்கள் அவர்களின் கணவருக்கு அதிர்ஷ்டசாலிகள். இந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள், தங்கள் வாழ்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். இந்த ராசிப் பெண்கள் லட்சுமி தேவியின் சிறப்பான அருளைப் பெற்றவர்கள். இவர்களின் வாழ்க்கையில் செல்வத்திற்கு குறைவே இருக்காது. கணவனின் முழு அன்பைப் பெறுவார்கள். இவர்கள் எங்கு சென்றாலும், அங்கு இனிமையான சூழ்நிலையை உருவாக்குவார்கள். சமூகத்தில் இவர்கள் நல்ல மரியாதையை கொண்டிருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் விவேகமானவர்கள். எல்லாவற்றையும் மிகவும் கவனமாக செய்வார்கள். இவர்கள் தன் கணவன் மற்றும் மாமியாருக்கு அதிர்ஷ்டசாலிகள். ஒவ்வொரு இன்பத்திலும் துன்பத்திலும் கணவனுடன் உறுதியாக நிற்பார்கள். இவர்கள் யாரை திருமணம் செய்தாலும் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவருவார்கள். இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் இவர்கள் செய்ய முடிவு செய்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க விரும்புவார்கள்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி. இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் கடின உழைப்பாளிகள். கஷ்டங்கள் வந்தாலும் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டார்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் தொழிலில் முன்னேற்றத்தை அடைவதோடு, தன் கணவரின் வெற்றியிலும் முக்கிய பங்கை வகிப்பார்கள். மகர ராசிப் பெண்கள் தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களைக் கவரும் குணம் கொண்டவர்கள். இந்த ராசி பெண்களை திருமணம் செய்யும் ஆண்களின் அதிர்ஷ்டம் மின்னும். இவர்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள். இதனால் இவர்களிடம் மற்றவர்கள் எளிதில் ஈர்க்கப்படுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications