Latest Updates
-
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
Gajlaxmi Rajyog In Aries 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சுக்கிரன் குரு பகவானின் ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் ஏப்ரல் 24 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்லவுள்ளார்.
இந்த மேஷ ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் மேஷ ராசியில் குரு சுக்கிரன் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையால் மிகவும் மங்களகரமான யோகமான கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மே 1 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். அதன் பின் குரு பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார்.

மேஷ ராசியில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் பண வரவு அதிகரிக்கப் போகிறது. இப்போது மேஷ ராசியில் உருவாகவுள்ள கஜலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பெற்றோரின் முழு ஆதரவால் உங்களின் இலக்கை அடைவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். லட்சுமி தேவியின் ஆசியால் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் அதிக ஈடுபாட்டினால் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சவாலையும் சமாளிப்பார்கள். லட்சுமி தேவியின் ஆசியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு செயலிலும் நல்ல வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். லட்சுமி தேவியின் ஆசியால் எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். மேலும் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications