Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
100 ஆண்டுகளுக்கு பின் 2024-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் பெருகும்..
Gajlaxmi Rajyog Forms After 100 Years In 2024: வேத ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த ஆண்டில் பல மங்களகமான ராஜயோகங்கள் உருவாகின்றன. பொதுவாக ராஜயோகங்களானது ஒருவரது நிதி நிலையில் சட்டென உயர்த்துவதோடு, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல வெற்றிகளைப் பெறச் செய்யும். அதில் ஒன்றான கஜலட்சுமி ராஜயோகம் 2024 ஆம் ஆண்டில் உருவாகவுள்ளது.
2024 ஆம் ஆண்டின் மே மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். அதே மே மாதத்தில் சுக்கிரனும் ரிஷப ராசியில் நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. அதுவும் சுக்கிரனின் சொந்த வீட்டில் இந்த சேர்க்கை நிகழ்வதால், இந்த யோகம் உருவாகிறது.

இப்படி உருவாகும் ராஜயோகத்தால் 2024 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைப்பதோடு, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேலும் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலர் புதிய வேலைகளைத் தொடங்கி வெற்றி பெறலாம். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
வேலை தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்ளலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாகனம், சொத்து, வீடு போன்றவற்றை வாங்கலாம். அரசியலில் இருப்பவர்கள், சில நல்ல பதவிகளைப் பெற வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2024-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். தைரியம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் சிறப்பாக இருக்கும். அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்படும்.
சிலர் முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறலாம். பங்குச் சந்தை, லாட்டரியில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் 2024-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. எந்த முதலீடுகளை செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும்.
நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சிலருக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications