Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
குரு சந்திரனால் உருவாகும் கஜகேசரி யோகம்: அக்டோபர் 28 முதல் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Gajkesari Yoga On 28 October 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களில் சந்திரன் மிகவும் வேகமாக நகரக்கூடிய கிரகமாகும். சந்திரன் ஒரு ராசியில் சுமார் இரண்டரை நாட்கள் வரை இருப்பார். சந்திரன் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் சேர்க்கை நிகழும். அந்த சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகக்கூடும். இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரனும் மேஷ ராசியில் பயணிக்கவுள்ளார். அதுவும் அக்டோபர் 28 ஆம் தேதி சந்திரன் மேஷ ராசிக்குள் நுழைந்து, குருவுடன் இணைந்து, கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த சேர்க்கையானது அக்டோபர் 30 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இதனால் இந்த யோகமும் அக்டோபர் 30 வரை நீடித்திருக்கும். இப்போது குரு சந்திரன் சேர்க்கையால் மேஷ ராசியில் உருவாகவுள்ள கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு, சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் இந்த யோகத்தால் வெற்றிகரமாக தொடங்கப்படும்.
நிதி நிலை வலுவாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். அலுவலகத்தில் உங்களின் வேலை உயர் அதிகாரிகளால் பாராட்டைப் பெறும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை தரும். குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும் மற்றும் அவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை வழக்கத்தை விட வலுவாகும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த யோகத்தால் ஒரு பெரிய நல்ல மாற்றம் ஏற்படும். முக்கியமாக நல்ல லாபத்தைக் காண முடியும். சிலருக்கு தொழில் ரீதியாக இக்காலத்தில் ஜாக்பாட் அடிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications