Latest Updates
-
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்..
100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் உருவாகும் யோகம்: பண மழையில் நனையும் ராசிகள்!
Akshaya Tritiya 2024: ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளானது சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாளை அடுத்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை நாளானது பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாளாகும். இந்த நாள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு உகந்த மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது மே 10 ஆம் தேதி வருகிறது.
வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் ஒரு மங்களகரமான ராஜயோகமாகும்.

இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. பணம் தேடி வரப்போகிறது. குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
மேஷம்
அட்சய திருதியை நாளில் மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கடகம்
அட்சய திருதியை நாளில் கடக ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
