Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க..
12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Gajkesari Yog 2024 In Taurus After 12 Years: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கைகளும், அவற்றால் சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தேவர்களின் குருவான குரு பகவான் மே 01 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் செல்கிறார். ரிஷப ராசியில் நுழைந்த ஓரிரு நாட்களிலேயே குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். அதைத் தொடர்ந்து மே 08 ஆம் தேதி சந்திரன் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது.

அதுவும் இந்த யோகமானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த யோகமாது மே 10 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இதனால் மே 08 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது ரிஷப ராசியில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். இக்காலத்தில் உங்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணத்தை முறையாக நிர்வகித்து வெற்றி பெறுவீர்கள். பணம் தொடர்பான பல முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். இந்த காலத்தில் முதலீடுகளை செய்தால், அதுவும் நல்ல பலனைத் தரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசியை சேர்ந்த மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். நிதி ரீதியாக செலவுகள் சற்று அதிகமாக இருக்கலாம். அதுவும் அந்த செலவுகள் சுப காரியங்களுக்காக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். மேலும் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். இந்த நட்பு பயனுள்ளதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றிகளையும், நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உடன் வேலை செய்வோருடனான உறவு சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications