Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
கஜகேசரி ராஜயோகம்: ஜனவரி 18 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசப் போகுது...
Gajkesari Rajyoga On 18 January 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 18 ஆம் தேதி சந்திரனும் மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் மேஷ ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் பண வரவைப் பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறவுள்ளார்கள். இப்போது மேஷ ராசியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகமானது உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்களின் இலக்குகளை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாகனம் மற்றும் புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறக்கூடும். சிலருக்கு சிக்கிய பணம் திடீரென்று கைக்கு வந்து சேரும். பொருள் வசதிகளில் நாட்டம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தை இக்காலத்தில் பெறுவார்கள். பொருள் வசதிகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். முக்கியமாக இந்த யோக காலத்தில் திட்டமிட்ட வேலைகள் எதிர்பார்த்தவாறு வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications