Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
மீனத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
மீன ராசியில் 2023 மார்ச் 22 ஆம் தேதி கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. கஜகேசரி ராஜயோகமானது குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகமாகும்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது நிகழும் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாவதுண்டு. இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் மீன ராசியில் 2023 மார்ச் 22 ஆம் தேதி கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
கஜகேசரி ராஜயோகமானது குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகமாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் என்ன தான் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி பலன்களை பெறுவதோடு, முன்னேற்றத்தையும் பெற வாய்ப்புள்ளது.

இப்போது மீனத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் நற்பலனைப் பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது நல்ல பலன்களை வாரி வழங்கவுள்ளது. அதிர்ஷ்ட வீட்டில் இந்த யோகம் உருவாகியிருப்பதால், இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களுக்கும் வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளில்நல்ல மதிப்பெண்களுடன் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

தனுசு
கஜகேசரி யோகமானது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான பலன்களைத் தரும். குறிப்பாக இக்காலத்தில் திடீர் பண ஆதாயங்களைப் பெறக்கூடும். தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் பேச்சால் பல அற்புதங்கள் நிகழும். பேச்சு தொடர்பான வேலையை செய்பவர்கள், இந்த யோக காலத்தில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக நற்பலன்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு லாபகரமான காலமாக இருக்கும். கூட்டு தொழில் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் மங்களகரமானதாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் திருமண வரன் கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். முக்கியமாக இந்த யோகத்தால், உங்கள் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications