Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
குரு, சந்திரனால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: ஆகஸ்ட் 07 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
Gajkesari Rajyoga In August 2023: ஆகஸ்ட் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழலாம்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், குரு பகவானும், சந்திரனும் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். யோகங்களில் கஜகேசரி ராஜயோகமானது மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது.

இந்த யோகத்தால் ஒருவரின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். இப்போது ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் கஜகேசரி ராயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
2023 ஆகஸ்ட் மாதத்தில் கஜகேசரி ராஜயோகம் எப்போது உருவாகிறது?
ஜோதிடத்தின் படி, குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாவது தான் கஜகேசரி ராஜயோகம். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 07 ஆம் தேதி சந்திரன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த மேஷ ராசியில் சந்திரன் ஆகஸ்ட் 09 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் கஜகேசரி ராஜயோகமானது 2 1/2 நாட்கள் வரை நீடித்திருக்கும். இப்போது கஜகேசரி ராசுயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்களைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் ஆகஸ்ட் 07 முதல் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். மேலும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் நல்ல வெற்றியை காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சட்ட விஷயங்களில் முடிவுகள் சாதகமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், மதிப்பும் அதிகரிக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications