Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
கஜகேசரி ராஜயோகத்தால் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது..
Gajkesari Rajyoga In Aries On June 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது, கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மனை வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது மங்களகரமான கிரகமான குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதேப் போல் சந்திரன் 2 1/2-3 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதி சந்திரன் மேஷ ராசியில் நுழைந்துள்ளார். இதனால் மேஷ ராசியில் குரு, சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில் கஜகேசரி ராஜயோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும்.
இந்த ராஜயோகத்தால் நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் திடீர் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது அற்புதமாக இருக்கப் போகிறது. ஏனெனில் முதல் வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும், இனிமையும் நிறைந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கும். ஏனென்றால் இந்த யோகம் மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனெனில் இந்த யோகமானது 12 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எந்த வேலையை செய்யும் போது, அவசரப்படாமல் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை வலுபெறும். திடீரென்று நல்ல பண ஆதாயம் கிடைக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். வியாபாரிகள் இக்காலத்தில் தங்கள் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications