Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அடுத்த 2 நாள் அதிர்ஷ்டமானதா இருக்கும்!
Gajkesari Rajyoga In Aries On July 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் மங்களகரமான கிரகமான குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதலாக மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் ஜூலை 10 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைந்து, குருவுடன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாகியுள்ளார்.

இந்த ராஜயோகமானது அடுத்த இரண்டு நாட்கள் நீடித்திருக்கப் போகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் திடீர் நிதி ஆதாயங்களையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வலுபெறும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் வேலை செய்பவர்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறக்கூடும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இது தொழில் வீடாகும். இதனால் இக்காலத்தில் தொழில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. மேலும் தந்தையின் ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications