Latest Updates
-
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
கஜகேசரி ராஜயோகத்தால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் பணப் பிரச்சனைகள் தீரப்போகுது...
Gajkesari Rajyog On February 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கைகளால் யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சந்திரன் இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இந்த மேஷ ராசியில் சுமார் இரண்டரை நாட்கள் வரை சந்திரன் பயணிக்கவுள்ளார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் மேஷ ராசியில் நுழைந்ததால் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் தீர்ந்து, அதிர்ஷ்டம் பிரகாசிக்கவுள்ளது. இப்போது கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் சிறப்பான அருளால் வெற்றிகளை பெறுவதோடு, நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்கள் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் வளர்ச்சியைக் காணலாம்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை படிப்படியாக உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குருவின் அருளால் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications