Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கஜகேசரி மற்றும் திரிகோண ராஜயோகத்தால் ஆகஸ்ட் மாசம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Gajakesari & Trikona Raja Yoga In August 2023: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மற்றம் சேர்க்கை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாகக்கூடும்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முக்கியமான மற்றும் மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. அவை கஜகேசரி யோகம் மற்றும் திரிகோண ராஜயோகம். இந்த இரண்டு யோகங்களும் மங்களகரமான யோகங்கள் என்பதால், இவை சில ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிக்க வைக்கும்.

இது தவிர பல அற்புதமான நன்மைகளையும் வாரி வழங்கும். இப்போது ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் இந்த யோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கஜகேசரி ராஜயோகம்
கஜகேசரி ராஜயோகம் என்பது ஜோதிடத்தில் உள்ள மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகம் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும். இந்த யோகத்தால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இந்த யோக காலத்தில் தைரியம் அதிகம் நிறைந்திருக்கும் மற்றும் எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.
திரிகோண ராஜயோகம்
திரிகோண ராஜயோகமானது மற்றொரு மங்களகரமான யோகமாகும். இந்த யோகம் ஒருவருக்கு வெற்றி, புகழ், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அமைதி போன்றவற்றைக் கொடுக்கும். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருந்தால், அந்நபர் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார். இந்த யோகமானது பொதுவாக 1, 5 மற்றும் 9 ஆவது வீட்டில் உருவாகும். திரிகோண ராஜயோகமானது தொழிலில் நல்ல வெற்றியைக் காண உதவி புரியும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கஜகேசரி மற்றும் திரிகோண ராஜயோகமானது அற்புதமான பலன்களைத் தரவுள்ளது. முக்கியமாக செல்வத்தை வாரி வழங்கப் போகிறது மற்றும் வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
இவ்விரு யோகங்களால் ஆகஸ்ட் மாதமானது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் வியாபாரத்தில் முதவீடு செய்தால் நல்ல லாபத்தைக் காணலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் மற்றும் திருமணம் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை இவ்விரு யோகங்களும் ஏற்படுத்தும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி மற்றும் திரிகோண ராஜயோகத்தால், ஆகஸ்ட் மாதத்தில் கனவுகள் நனவாகும் மற்றும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியை இவ்விரு யோகங்களும் காண செய்யும். எப்பேற்பட்ட சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
திட்டமிட்டு வேலை செய்தால் இலக்குகளை எளிதில் அடையலாம். செல்வத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கடின உழைப்புக்கான நல்ல பலன்கள் இம்மாதத்தில் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications