Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கஜகேசரி, குரு புஷ்ய யோகம்: 2024 புத்தாண்டின் தொடக்கம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
New Year 2024: வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அதுவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

ஆண்டின் இறுதி நாளில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால், 2024 புத்தாண்டில் பல ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. அதோடு குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையும் காலத்தில் கஜகேசர ராஜயோகம் உருவாகிறது.
அத்துடன் குரு புஷ்ய யோகமும் உருவாகிறது. இதன் விளைவாக 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். மேலும் கஜகேசரி மற்றும் குரு புஷ்ய யோகமும் உருவாவதால் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சில முக்கியமான முடிவுகளையும் இக்காலத்தில் எடுக்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதோடு இந்த வீட்டில் கஜகேசரி யோகம் உருவாவதால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நீண்ட நாட்களாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தையுடன் இருந்த சண்டை முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குரு புஷ்ய யோகத்தால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு இனிமையாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். மேலும் இந்த வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாவதால், 2024 புத்தாண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும். மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். நிதி நிலை வலுவாகும். முக்கியமாக கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications