Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
Friendship Day 2024: தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரெண்ட்ஷிப் படங்கள் ஒரு பார்வை..!
தமிழ் சினிமாவில் எல்லாவிதமான ஜனர்களிலும் படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிக்கொண்டுள்ளன. இதில் காதலின் இனிமையை பற்றியும், குடும்பங்களின் அன்பை பற்றியும், எதிரியின் மனதைபற்றியும் பேசும் படங்கள் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு நட்பின் மேன்மையை வெளிப்படுத்தும் படங்களும் உள்ளன..
சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், நட்பின் பெருமையை உணர்த்தும் அனைத்து படங்களுமே அதிகமான நாட்கள் ஓடி அதிக வசூலை பெற்றது.. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நட்பின் முக்கியத்துவம் உள்ளது.. சரி வாங்க தமிழ் சினிமாவில் பிரெண்ட்ஷிப் படம் என்றால் உடனே நினைவுக்கு வரும் படங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.. இதில் உங்க ஃபேவரைட் படம் இருக்கானு பாருங்க...

1. தளபதி
தேவா, சூர்யா என்ற இரண்டு நண்பர்கள் பற்றிய படம். மகாபாரதத்தில் கர்ணன் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை மணிரத்னம் உருவாக்கியிருந்தார். நட்புனா என்னனு தெரியுமா, தேவானா என்னனு தெரியுமா என்ற இந்தப் படத்தின் வசனம் மிக பிரபலம். நண்பர்கள் தினம் என்றால் முதலில் நினைவுக்குவருவது இந்தப் படமாக தான் இருக்கும்.
2. கண்ணெதிரே தோன்றினாள்
இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1998-ஆம் ஆண்டு வெளிவந்த படம் கண்ணெதிரே தோன்றினாள். இந்த படத்தில் பிரசாந்த் - கரண் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். தனது நண்பனின் தங்கைதான் அவர் காதலிக்கும் பெண் என்று தெரிந்ததும் நட்புக்காக தன்னுடைய காதலை விடுகிறார் பிரசாந்த். இறுதியில் கரணுக்கு உண்மை தெரிந்து பிரசாந்தை தனது தங்கையான சிம்ரனுடன் சேர்த்து வைக்கிறார்.
3. ஃபிரெண்ட்ஸ்
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிரண்ட்ஸ். விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் சிறுவயதிலிருந்தே நட்புடன் பழகுவார்கள். ஒரு தவறு அவர்கள் நட்பை எப்படி பிரிக்கிறது, 3 நண்பர்கள் மீண்டும் எப்படி இணைந்தார்கள் என்பதை எமோஷனலாக பேசிய படம். நட்புக்காக உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு படம் அமைந்திருந்தது.
4. புது வசந்தம்
புது வசந்தம் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். விக்ரமன் இயக்கத்தில் முரளி, சித்தாரா, ஆனந்த் பாபு, ராஜா, மற்றும் சார்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆண், பெண் நட்புடன் பழக முடியும் என்ற கருத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்டிருந்த படம். இயக்குநர் விக்ரமனின் முதல் படம். 4 ஆண்களும் ஒரு பெண்ணும் ஒரே வீட்டில் நட்புடன் பழகுவதாக காட்சிப்படுத்தியிருப்பார்.
5. பிரியமான தோழி
பிரியமான தோழி என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படமாகும் , இது விக்ரமன் எழுதி இயக்கியது மற்றும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. இப்படத்தில் மாதவன் , ஜோதிகா , ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் வினீத் ஆகியோர் நடித்துள்ளனர் , லிவிங்ஸ்டன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் மற்ற துணை வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரமன் இயக்கிய இந்தப் படமும் புதுவசந்தம் படத்துக்கு பிறகு ஆண் - பெண் நட்பின் மேன்மையை பற்றி பேசிய படம்.
6. நண்பன்
நல்ல நண்பனின் வருகை, 2 பேரின் வாழ்க்கையை எப்படி மேன்மை அடைய செய்கிறது என்பதை பேசிய படம். ஹிந்தியில் ஆமிர் கான் நடிப்பில் வெற்றிபெற்ற 3 இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் ஷங்கர். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
7.தோழா
இயக்குநர் வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா இணைந்து நடித்த படம். தி இன்டச்சபிள்ஸ் (The Intouchables) என்ற பிரெஞ்சு படத்தின் தமிழ் ரீமேக். கழுத்து கீழே செயல்படாத நிலையில் இருக்கும் கோடீஸ்வரரான நாகர்ஜுனாவை கவனித்துக்கொள்ள நியமிக்கப்படுகிறார் கார்த்திக். தன்னை சுற்றியுள்ளவர்களின் இரக்க உணர்வு நாகர்ஜுனாவை வெகுவாகபாதிக்க, கார்த்தி அவரது வாழ்வை சுவாரசியமானதாக மாற்றுகிறார். இருவரிடையே உருவாகும் நட்பு அவர்களது வாழ்வை எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது என்பதே இந்தப் படத்தின் கதை.
8. சென்னை 28
சென்னை 600028 2007 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். எஸ். பி. பி. சரண், ஜே.கே. சரவணா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு வெங்கட் பிரபுவால் இயக்கப்பட்டது. சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்ஸ்மி அஹாதியன், கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குவியுமடா என்று சொன்ன படம். 6 நண்பர்கள் ஒரு வருடத்தில் அவர்கள் வாழ்வில் நடக்கும் நட்பு, காதல், பிரிவு, மோதல், கொஞ்சம் கிரிக்கெட் ஆகியவை தான் இந்தப் படம்.
9.குசேலன்
பி வாசு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் குசேலன். இந்த படத்தில் ரஜினிகாந்த், பசுபதி, மீனா, வடிவேல், நயன்தாரா உட்பட பல நடிகர்கள் இருந்தார்கள். தனது பால்ய நண்பன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எப்படி சந்திப்பது என்ற தயக்கத்தில் இருக்கிறார் பசுபதி. பின் இறுதியில் ரஜினி தன்னுடைய நண்பனை பற்றி கூறுகிறார். இறுதியில் இருவரும் சேருகிறார்கள். இந்த படமும் மலையாள ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
10. காதல் தேசம்
இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த படம் காதல் தேசம். இந்த படத்தில் வினீத்,அப்பாஸ்,தபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். முஸ்தபா பல என்ற பாடலின் மூலம் என்றென்றும் நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்த சிறந்த படமாக காதல் தேசம் இருக்கிறது. இந்த படத்தில் அப்பாஸ், வினித் இருவரும் உயிர் நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால், இருவருமே தபுவை காதலித்தார்கள். அடுத்து என்ன என்பது தான் படத்தின் கதை. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.



Click it and Unblock the Notifications











