Latest Updates
-
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Friendship Day 2024: தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்!
Friendship Day 2024: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறார்கள். ஏனெனில் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்கும் எந்த ஒரு விஷயத்தையும் நண்பர்களுடன் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ள முடியும்.
அப்படிப்பட்ட நண்பர்களை நம் வாழ்வில் பல வழிகளில் சந்திக்கலாம். சிலருக்கு சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்து வாழ்நாள் முழுவதும் அந்த நட்பு நீடித்திருக்கலாம். இன்னும் சிலருக்கு நடுவில் அமைந்து, அது இறுதி வரை நீடித்திருக்கலாம் அல்லது மறைந்தும் போகலாம். என்ன தான் சில நட்பு நீடிக்காமல் இருந்தாலும், அவர்கள் மீது அன்பும், அக்கறையும் எப்போதும் இருக்கும்.

அதுவும் சில ஆண், பெண் நட்பை எடுத்துக் கொண்டால், சிலர் அந்த நட்பு எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நட்புபை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, வாழ்நாள் முழுவதும் நல்ல நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணையாகவும் வாழ்ந்து வருவார்கள். அதற்கு உதாரணமாக நமது தமிழ் திரையுலகில் கூட சில பிரபலங்கள் உள்ளனர். இன்று நண்பர்கள் தினம் என்பதால், கோலிவுட்டில் நண்பரை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா
குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட கால நெருங்கிய நண்பரான சோஹேல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 2022 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. சோஹேல் அவரது சகோதரர் பிரசாந்த் மூலம் ஹன்சிகாவிற்கு அறிமுகமானார். பின் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். தற்போது நல்ல ஜோடியாக உள்ளனர்.
விஜய் சேதுபதி மற்றும் ஜெஸ்ஸி
நடிகர் விஜய் சேதுபதி திரைத்துறையில் நுழைவதற்கு முன் துபாயில் இருந்துள்ளார். அப்போது தான் அவர் தனது மனைவி ஜெஸ்ஸியை சமூக வலைத்தளத்தில் சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதன் பின் இவர்கள் 2003 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
ரஜினிகாந்த் மற்றும் லதா
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை அனைவரும் அறிவோம். லதா அவர்கள் ஆரம்பத்தில் ரஜினிகாந்த்தை இன்டர்வியூ எடுக்க வந்த போது தான் முதன்முதலில் சந்தித்தார். அப்போது அவர் ஒரு கல்லூரி மாணவியாக இருந்தார். பின் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அதன் பின் 1981-ல் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்து கொண்டார்.
விஜய் மற்றும் சங்கீதா
நடிகர் விஜய் தனது தீவிர ரசிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் என்பதை அனைவருமே அறிவோம். ஆனால் நடிகர் விஜய், சங்கீதாவை திருமணம் செய்வதற்கு முன், இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்தனர். அதன் பின்னர் தான் நடிகர் சங்கீதாவிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்ச்லு
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை தான் காஜல் அகர்வால். இவர் கௌதம் கிட்ச்லுவை பொதுவான நண்பர்கள் மூலம் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் 7 வருடம் நண்பர்களாக இருந்துள்ளனர். அதன் பின் 3 ஆண்டுகள் டேட்டிங் செய்துள்ளனர். அதன் பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.



Click it and Unblock the Notifications











