Latest Updates
-
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும்
இந்த 5 ஜோடி ராசிக்காரங்க நண்பருக்காக உயிரையே கொடுப்பாங்களாம்... உங்க நண்பரோட ராசி என்ன?
Zodiac Best Friends In Tamil : நட்பு என்பது எந்தவித எதிர்பார்ப்பவும் இல்லாத இரத்த சொந்தமும் இல்லாத மாயாஜால பந்தம். ஆனால், இணைய பிரியாத நண்பர்களாக இருப்பதற்கும் கடின உழைப்பு தேவைப்படுகிறது. நல்ல மற்றும் கெட்ட காலங்கள் என எப்போதும் உங்களுடன் உங்களுக்காக இருப்பவர்கள் உண்மையான நண்பர்கள்.
ஒரு உறவில் நம்பிக்கை, விசுவாசம், அன்பு மற்றும் அக்கறை இருக்கும் போது உண்மையான தொடர்புகள் ஏற்படும். இருப்பினும், உண்மையாகத் தோன்றும் இந்த இணைப்பு மிக வலுவாகவும் கடைசி வரை உங்களுடனும் இருக்கலாம். எனவே, ஏமாற்றும் நபர்களை உங்களிடம் இருந்து தள்ளி வைப்பதும் மற்றும் போலியானவற்றிலிருந்து உண்மையானதை வேறுபடுத்தி பார்ப்பதும் அவசியம்.

உண்மையான நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்கள் எப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்கள். காலத்தின் சோதனையைத் தாங்கி, உங்களுடன் நிற்கிறார்கள். பிரிக்க முடியாத நபர்களாகவும் எப்போதும் இணைந்திருக்கும் நபர்களாகவும் சிலர் உள்ளனர்.
அந்த நபர்களை ஜோதிடத்தின் மூலம் நீங்கள் அடையாளம் காணலாம். நம்பமுடியாத அளவிற்கு இணைபிரியாத தோழர்களாக இருக்கும் ராசி ஜோடிகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த ராசிக்காரர்களை உங்கள் வாழ்க்கையில் நண்பர்களாக பெறுவதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றால், இதைப் பாதுகாக்க கடினமாக உழைக்கவும் வேண்டும்.
மேஷம் மற்றும் மிதுனம்
மேஷம் ராசி நேயர்கள் சாகச குணம் கொண்டவர்களாகவும் தைரியமானவர்களாகவும் அறியப்பட்டாலும், மிதுன ராசிக்காரர்கள் நகைச்சுவை மீது ஆர்வமுள்ள நபர்களாக இருக்கிறார்கள். எனவே, இந்த டைனமிக் இரட்டையரின் ஆற்றல் முற்றிலும் மின்சாரம் போன்று இணைந்தே இருக்கும்.
நட்பைப் பொறுத்தவரை, இந்த இரண்டு ராசிக்காரர்களும் மிகவும் தன்னிச்சையானவர்கள், இது அவர்களின் பிணைப்பை உற்சாகப்படுத்துகிறது. அறிவுத்திறன், சிரிப்பு மற்றும் உற்சாகம் அவை அனைத்தும் இந்த இரண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வேடிக்கையை கொண்டு வருகிறது. இதுவே, அவர்கள் நெருக்கிய நண்பர்களாக எப்போதும் இருப்பதற்கு காரணமாகிறது.
ரிஷபம் மற்றும் கடகம்
ரிஷப ராசி நேயர்கள் மண் சார்ந்தவர்கள் என்று அறியப்பட்டாலும், கடக ராசிக்காரர்கள் உணர்திறன் மற்றும் வளர்ப்பு இயல்புக்கு பிரபலமானவர்கள். நட்பைப் பொறுத்தவரை, அவர்கள் மதிப்பைப் புரிந்துகொள்கிறார்கள். எனவே, அவர்களுக்குள் அக்கறையும் இரக்கமும் நிறைந்த ஒரு இணைப்பை உருவாக்க முடிகிறது.
இது ஒரு நடைமுறை அணுகுமுறையாக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமான ஆதரவாக இருந்தாலும் அல்லது பச்சாதாபமாக இருந்தாலும், இரண்டு ராசிக்காரர்களும் ஒருவரோடு ஒருவர் பிணைந்து இருப்பார்கள். இதுவே, இவர்கள் எப்போதும் சிறந்த நபர்களாக இருப்பதற்கு காரணமாகிறது.
சிம்மம் மற்றும் துலாம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் கவர்ச்சியான ஆளுமையை வெளிப்படுத்தும் அதே வேளையில், துலாம் ராசிக்காரர்கள் சமநிலையை எதிர்பார்க்கிறார்கள். எனவே, இரண்டு ராசி நேயர்களும் சந்திக்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் துடிப்பான ஆளுமைகளால் அறையை ஒரு பிரகாசமாக ஒளிரச் செய்கிறார்கள்.
சமூகமயமாக்கல் என்பது அவர்கள் இருவரும் விரும்பும் ஒவ்வொரு சூழ்நிலையையும் கருணை மற்றும் இராஜதந்திரத்துடன் கையாள்வது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் அவர்கள் வாழ்க்கையில் புன்னகையையும் மகிழ்ச்சியான நினைவுகளையும் விட்டுச் செல்வதில் பெயர் பெற்றவர்கள்.
கன்னி மற்றும் விருச்சிகம்
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் பகுத்தறிவோடு செயல்படுபவர்களாகவும், விவரங்களை சரியாக அணுகுபவர்களாகவும் அறியப்பட்டாலும், விருச்சிக ராசிக்காரர்கள் அவற்றின் மர்மமான மற்றும் தீவிரமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். எனவே, இருவரும் ஒன்றாக வரும் போதெல்லாம், அவர்கள் உறுதியும் புத்திசாலித்தனமும் சேரப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சக்தியை உருவாக்குகிறார்கள்.
உணர்ச்சிபூர்வமான நுண்ணறிவு அல்லது நடைமுறை முடிவுகளை எடுப்பது எதுவாக இருந்தாலும், இலக்குகளை அடையும் போது இருவரும் ஒருவரையொருவர் ஆதரிக்கிறார்கள்.
தனுசு மற்றும் கும்பம்
தனுசு ராசிக்காரர்கள் தத்துவ ரீதியாக ஓர் விஷயத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் என்றாலும், கும்ப ராசிக்காரர்கள் வழக்கத்திற்கு மாறானவர்கள் மற்றும் முற்றிலும் புதுமையானவர்களாக இருப்பார்கள். இரண்டு ராசிக்காரர்களும் திறந்த மனது கொண்டவர்கள். இது இருவரும் இணை பிரியா நண்பர்களாக இருப்பதற்கு போதுமான இடத்தை விட்டுச்செல்கிறது.
சுதந்திரம், நம்பிக்கை மற்றும் புதுமையான யோசனைகள் ஆகியவை இந்த நட்பை தொடர்ந்து வைத்திருக்கும் எரிபொருளாகும். மேலும் நட்சத்திரங்களை அடைய அவை ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications

