Latest Updates
-
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
உங்கள் ஃப்ரிட்ஜில் கூலிங் குறைந்து விட்டதா? கவலைய விடுங்கா.. இனி இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்..!
இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலுமே ஃப்ரிட்ஜ் என்னும் குளிர்சாதன பெட்டி உள்ளது. குளிர்சாதன பெட்டியானது உணவுகளை விரைவில் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இப்படிப்பட்ட குளிர்சாதன பெட்டி சரியாக வேலை செய்கிறதா? என்று பார்த்துக் கொள்வது அவசியம்.
குளிர்சாதனப்பெட்டியைப் பயன்படுத்துகிறவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்கள் குளிர்சாதனப்பெட்டி சேதமடையக்கூடும். இதன் காரணமாக நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். கோடைக்காலத்தில் இந்தப் பிரச்னை அதிகமாக வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் அதனை அவ்வபோது கவனிக்க வேண்டும். குறிப்பாக அதன் குளிர்ச்சி தன்மை சரியாக உள்ளதை உறுதி செய்யவும்.

இது குறித்து நிபுணர் கிரண் கூறுகையில், கோடை காலத்தில், குளிர்சாதன பெட்டியில் அதன் குளிர்ச்சி குறைந்துவிட்டால் அது குளிர்சாதன பெட்டியையே சேதப்படுத்தும். ஃப்ரிட்ஜ் பழுதடைந்தால், அதை சரிசெய்ய குறைந்தது 3000 முதல் 4000 ரூபாய் வரை செலவாகும். அதனால் நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், உங்கள் குளிர்சாதன பெட்டி சேதமடையாது. இது குறித்து நிபுணர் கிரண் கூறும் சில டிப்ஸை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
1. உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் உறைந்த பனிக்கட்டி இருந்தால், நீங்கள் அதை ஒரு கூர்மையான பொருளைக் கொண்டு அகற்றக்கூடாது. அப்படி செய்தால், உங்கள் ஃப்ரீஸர் (freezer) துளைகளால் சேதமடையும். இதனால் வாயு கசிவு ஏற்பட்டு உங்கள் குளிர்சாதன பெட்டி குளிர்ச்சியடையாது.
2. ஃப்ரீஸரில் உள்ள ஐஸ் கட்டிகள் சுற்றிலும் மலைபோல் காட்சியளிக்கும். அது ஃபிரிட்ஜ்ஜின் ஆயுட்காலத்தை குறைத்துவிடும், விரைவில் பாழாகிவிடும். அதனால் வலதுபுற மேற்புறத்தில் இருக்கும் யூனிட் பட்டனை அழுத்திவிட்டால் போதும் அவையெல்லாம் கரைந்து பின் பக்கம் இருக்கும் டப்பாவில் சேர்ந்துவிடும். அதை நீக்கி தண்ணீரை வெளியேற்றிவிடுங்கள். அதிக நீர் கட்டிகளாக இருந்தால் அவை ஃபிரிட்ஜ்ஜிற்கு உள்ளேவும் நீரை வெளியேற்றும் அந்த சமயத்தில் ஃபிரிட்ஜ்சை அனைத்துவிட்டு முற்றிலும் துடைத்துவிட்டு பொருட்களை வையுங்கள்.
3. தினமும் ஃப்ரிட்ஜ் கதவை திற்கும்போது முழுவதுமாகத் திறந்து பொருட்களை வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், அதில் அனல் காற்று நிரம்பிவிடும். இதனால், குளிர்சாதன பெட்டி விரைவில் குளிர்ச்சியடையாது. ஃப்ரிட்ஜை அடிக்கடி ஆஃப் செய்து ஆன் செய்தால், அது அதன் கம்ப்ரசரை பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் குளிர்விக்கும் தன்மை குறைந்துவிடலாம்.
4. ஃபிரிட்ஜ்ஜை மாதம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது அவசியம். அவ்வாறு சுத்தம் செய்யும்போது பொருட்களை வெளியே எடுத்துவிட்டு, ஐஸ் கட்டிகள் கரைந்து நீர் வெளியேறியதும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு பருத்தித் துணியால் துடைத்து எடுங்கள். அவை காய்ந்ததும் பெருட்களை உள்ளே வைத்து ஆன் செய்து விடுங்கள்.
5. பொருட்களை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கும்போது அறையின் வெப்ப நிலையில் வையுங்கள். இல்லையெனில் வெப்பம் உள்ளே சுற்றிக் கொள்ளும். அதைக் குளுமையாக்க கம்ப்ரஸர் அதிக நேரம் இயங்க ஆரம்பிக்கும். இதனால் கம்ப்ரஸர் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம்.
6. ஃபிரிட்ஜ்ஜின் வெப்ப நிலையை குறைத்து வைத்தீர்களானால் அதன் குளுமையும் அதிகமாக இருக்கும். மளிகை பொருட்களும் அதிக குளுமையாகிவிடும். ஃபிரிட்ஜ்ஜில் இருக்கும் பொருளுக்கு ஏற்ப வெப்ப நிலையை வையுங்கள்.
7. கதவின் மேல் உள்ள ரப்பர் கேஸ் கெட்டை மாதத்திற்கு ஒரு முறை கழட்டி சுத்தம் செய்வது அவசியம். கழுவும்போது வினிகர் பயன்படுத்திக் கழுவினால் பிசுபிசுப்புகளின்றி சுத்தமாக இருக்கும். இல்லையெனில் ஃபிரிட்ஜின் குளுமை வெளியேறி பொருட்கள் கெட்டுப் போகும். மின்சார செலவும் அதிகமாகும்.
இந்த விஷயங்களைப் பின்பற்றினால், உங்கள் ஃப்ரிட்ஜ் கெட்டுப் போகாது. அதன் குளிரூட்டும் திறன் அப்படியே இருக்கும்” என்கிறார் நிபுணர் கிரண்.



Click it and Unblock the Notifications