Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ராம நவமியில் உருவாகும் 4 அரிய யோகங்கள்: இந்த 4 ராசிக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
Ram Navami 2023: ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ நவமி திதியில் ராம நவமி கொண்டாடப்பட்டு வருகிறது. ராம நவமி என்பது ராமர் பிறந்த நாளாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ராம நவமியானது மார்ச் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் ராமல் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். விஷ்ணு பகவான் தர்மத்தை மீட்டெடுக்க ராமராக அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்து மதத்தில் ராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதுவும் 2023 ஆம் ஆண்டின் ராம நவமியாது இன்னமும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் மிகவும் அரிய யோகங்கள் உருவாகின்றன. ராம நவமி நாளில் மீன ராசியில் சூரியன், புதன், குருவும், கும்ப ராசியில் சனியும், மேஷ ராசியில் சுக்கிரனும், ராகுவும் இருப்பார்கள். இந்த கிரகங்களின் நிலைகளால் மாளவ்யா, கேதார், ஹன்ஸ் மற்றும் மகாபாக்ய யோகங்கள் உருவாகும்.
இது மட்டுமின்றி சர்வார்த்த சித்தி, அமிர்த சித்தி, குரு புஷ்ய யோகம் மற்றும் ரவி யோகமும் இந்த ராம நவமி நாளில் வருகின்றன. இப்படி ஒரே நாளில் பல யோகங்கள் உருவாவதால், இந்த ராம நவமி நாளில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2023 ஆம் ஆண்டின் ராம நவமி நாளானது ரிஷப ராசிக்கார்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, வலுவாகும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பல புதிய பொறுப்புக்களும் உங்களிடம் கொடுக்கப்படும். இந்நாளில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ராம நவமி நாளானது மறக்க முடியாத பொன்னான நாளாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த கடன் தொல்லையில் இருந்து விடுபடும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களுக்கான வழிகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனால் மரியாதை அதிகரிக்கும் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராம நவமி நாளில் நிதி ரீதியாக மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக இந்நாளில் வருமானம் உயர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். முக்கியமான ராம பிரானின் ஆசீர்வாதத்தில் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


