Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகும் 4 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
நான்கு ராஜயோகங்கள் மீன ராசியில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாகவுள்ளன. அவை கஜகேசரி யோகம், நீச்சபங்க ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம் மற்றும் ஹன்ஸ் ராஜயோகம் ஆகும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகளால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில நேரங்களில் ஒரு ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட யோகங்கள் உருவாவதுண்டு.
அந்த வகையில் நான்கு ராஜயோகங்கள் மீன ராசியில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாகவுள்ளன. அவை கஜகேசரி யோகம், நீச்சபங்க ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம் மற்றும் ஹன்ஸ் ராஜயோகம் ஆகும். இந்த 4 யோகங்களும் மீன ராசியில் உருவாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

ஆனால் அதில் 5 ராசிக்காரர்கள் இக்காலத்தில் திடீர் பண ஆதாயத்தைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் லாபத்தையும் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த 4 ராஜயோகங்களானது அற்புதமான பலனைத் தரும். ஏனெனில் இந்த ராஜயோகங்களானது லாப வீட்டில் உருவாகியுள்ளன. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களை பெறுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். திடீர் பண ஆதாயத்திற்கான வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த 4 யோகங்களானது நற்பலனை வாரி வழங்கும். ஏனெனில் இந்த யோகங்களானது அதிர்ஷ்ட வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் அனைத்து விஷயங்களிலும் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்களின் சேமிப்பும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை இக்காலத்தில் கிடைக்கும். வெளிநாட்டு பயணத்திற்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த 4 யோகங்களால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காணக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு மார்ச் மாதத்திற்கு பின் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். ஏன் விரும்பிய இடமாற்றத்தையும் பெறலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தந்தையுடனான உறவு மேம்படும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது மற்றும் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் இந்த 4 ராஜயோகங்களும் உருவாகவுள்ளன. இதனால் பொருள் மகிழ்ச்சி கிடைப்பதோடு, சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களும் அமையும். வணிகர்கள் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறாம். கூட்டு தொழில் செய்பவர்கள் வெற்றியைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் இந்த 4 ராஜயோகங்களும் உருவாகவுள்ளன. இதனால் நிலம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும் வெற்றியும் கிடைக்கும். அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதால், அனைத்து விஷயங்களிலும் வெற்றி காண்பீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

