Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
ஜூலை மாத கிரக பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்களோட அதிர்ஷ்டம் தகதகன்னு ஜொலிக்கப் போகுது..
Five Planets Transit In July 2023: ஜூலை மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஜூலை மாதத்தில் 5 கிரகங்களின் இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதில் ஜூலை மாதத்தின் முதல் நாளே செவ்வாய் சிம்ம ராசியில் நுழையவுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஜூலை 07 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அதன் பின் ஜூலை 08 ஆம் தேதி புதன் கடக ராசிக்குள் நுழைகிறார். அஸ்தமன நிலையில் கடக ராசிக்குள் நுழைந்த புதன், ஜூலை 14 ம் தேதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். பின்பு ஜூலை 16 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

ஜூலை மாதத்தின் முதல் பாதியில் பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றிய நிலையில், இரண்டாம் பாதியில் ஜஜூலை 23 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் வக்ரமாகிறார். மேலும் ஜூலை 23 ஆம் தேதியிலேயே கடக ராசியில் வக்ர நிலையில் சுக்கிரன் பயணிக்கவுள்ளார்.
அதன் பின் ஜூலை 25 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இப்படி ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த கிரக நிலைகளால் நற்பலனைப் பெறவுள்ளார்கள்.
குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது ஜூலை மாத கிரக நிலைகளால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமானது அட்டகாசமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறக்கூடும். மேலும் உங்களின் வசதிகள் அதிகரிக்கும் மற்றும் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பேச்சால் பலரை எளிதில் ஈர்ப்பீர்கள். நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இம்மாதத்தில் வாழ்வின் பல விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் எண்ணம் கொண்டவர்களின் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலை மிகச்சிறப்பாக இருக்கும்.
சொத்து அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் இம்மாதத்தில் கிடைக்கும். மேலும் நிலுவையில் உள்ள முக்கிய வேலைகள் இம்மாதத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தனுசு
ஜூலை மாதமானது தனுசு ராசிக்காரர்களுக்கு ஏராளமான நற்பலன்களை வாரி வழங்கவுள்ளது. இந்த ராசிக்காரர்களின் பல ஆசைகள் இம்மாதத்தில் நிறைவேறக்கூடும். பல வழிகளில் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் மற்றும் சேமிப்பு அதிகரிக்கும்.
இம்மாதம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு இம்மாதத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு பதவி உயர்வையும் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications