Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
ஆகஸ்ட் கடைசி வாரம் 5 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால்.. இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது..
Five Planets Retrograde In August Last Week: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, சில சமயங்களில் அவை வக்ர நிலையில் பின்னோக்கியும் பயணிக்கின்றன. அப்படி கிரகங்கள் வக்ரமாகும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சமீபத்தில் புத்திகாரகன் புதன் ஆகஸ்ட் 24 ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். இப்படி புதன் வக்ரமாகும் போது, ஏற்கனவே சனி, சுக்கிரன், ராகு, கேது ஆகிய 4 கிரகங்களும் வக்ர நிலையில் உள்ளன. இதனால் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் 5 கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும்.

இப்படி 5 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றியையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெற்றுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
5 கிரகங்கள் வக்ர நிலையில் இருப்பதால், வியாபாரம் செய்யும் மேஷ ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவார்கள். காதலிப்பவர்களுக்கு அந்த காதல் வெற்றி அடையலாம். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் கோபத்தை மட்டும் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 5 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரம் மிகவும் நன்றாக இருக்கும். முக்கியமாக வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலை நன்கு வலுவடையும். மொத்தத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
சிம்மம்
5 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரம் பல நன்மைகளை வழங்குவதாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெறலாம். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரம் நல்ல லாபகரமானதாக இருக்கும். 5 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண வரவும் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இக்காலத்தில் போடும் எந்த திட்டமும் வெற்றிகரமான முடிவைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications