Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நவம்பரில் 5 கிரகங்கள் ராசியை மாற்றுவதால் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப் போகுது...
Five Planet Transits In November 2023: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் சுக்கிரன், சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய 5 கிரகங்கள் தங்கள் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன.
இதில் சுக்கிரன், செவ்வாய், சூரியன், புதன் ஆகிய 4 கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. சனி பகவான் வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். அத்துடன் சந்திரனும் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் இணைந்து ஒருசில யோகங்களை உருவாக்குகின்றன.

இந்த கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, சச ராஜயோகம், கஜகேசரி ராஜயோகம் போன்ற யோகங்களும் உருவாவதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த யோகத்தால் 4 ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதோடு, அதிர்ஷ்டமும் பிரகாசிக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
நவம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இம்மாதமானது சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம்
நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சிலரது நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்க சிறந்த மாதம். முதலீடுகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் கன்னி ராசிக்காரர்களுக்கு சூப்பராக இருக்கும். பல வெற்றிகளைப் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சனி பகவானின் அருளால் எதிரிகளை வெற்றி காண்பீர்கள். மேலும் சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். ஆரோக்கியம் வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
மகரம்
நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் மகர ராசிக்காரர்களுக்கு இம்மாதமானது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் உங்கள் கையில் செல்வம் குவியும். எதிர்பாராத பணத்தைப் பெறுவீர்கள்.
புதிதாக தொழிலை தொடங்கியிருந்தால், அதில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். இம்மாதத்தில் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications