Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
100 ஆண்டுகள் கழித்து ரிஷபத்தில் ஒன்றிணையும் 5 கிரகங்கள்: இந்த 3 ராசிகளின் செல்வம் இருமடங்கு பெருகும்..
Five Planet Conjunction In Taurus 2024: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களையும் உருவாக்கும். அந்த வகையில் ஐந்து கிரகங்களின் சேர்க்கையால் பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது.
அதுவும் இந்த யோகமானது ரிஷப ராசியில் புதன், சுக்கிரன், சூரியன், குரு, சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகியுள்ளது. இந்த யோகம் ஒரு மங்களகரமான சுப யோகம். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

முக்கியமாக பணியிடத்தில் பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம் போன்றவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பஞ்சகிரக யோகமானது வருமானத்தை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பஞ்சகிரக யோகமானது வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைத் தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளதால், இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையான இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications