2024-ல் இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் புரளப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

Finance Horoscope 2024: இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஒவ்வொரு புத்தாண்டில் நுழையும் போதும், நம் அனைவரது மனதிலும் நம் வாழ்க்கைக் குறித்த பலவிதமான கேள்விகள் எழும். மேலும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம். அதில் ஒன்று தொழில், மற்றொன்று பணம். இந்த இரண்டைப் பற்றி தான் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம். இதற்கு ஜோதிடம் பெரிதும் உதவி புரியும்.

ஏனெனில் கிரகங்களின் நிலைகள் தான் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் 2024 ஆம் ஆண்டில் கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கப் போகிறது. இன்னும் சில ராசிக்காரர்ளுக்கு மோசமாக இருக்கப் போகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் நிதி ரீதியாக எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

Finance Horoscope 2024: Money Horoscope For 12 Zodiac Signs In 2024 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக சுமாராக இருக்கும். இந்த ஆண்டில் நிதி சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முடிந்தவரை செலவுகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பரம்பரை சொத்துக்களை விற்க நினைத்தால், அதை இந்த ஆண்டில் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக கலவையாக இருக்கும். இந்த ஆண்டில் வருமானம் சிறப்பாக இருந்தாலும், நிறைய செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக மே மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் நிதி முடிவுகளை எடுக்கும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். செலவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும். இருப்பினும் குருவின் அருளால் மே மாதத்திற்கு பின் பணப் பிரச்சனை சற்று குறையும். ஆகஸ்ட் முதல் நிதி நிலை சற்று நன்றாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக கலவையாக இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும் மற்றும் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆண்டின் தொடக்கம் நன்றாக இருக்கும். இருப்பினும் போக போக நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் பண பிரச்சனைகளை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டில் செலவுகளை கவனமாக செய்ய வேண்டும். நிறைய செலவுகளை செய்தால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நன்றாக இருக்கும். இந்த மாதத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாதெனில், எடுக்கும் நிதி முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டில் வரவு செலவுக்கு இடையில் சமநிலையைப் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக இந்த ஆண்டில் முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். எதையும் நன்கு தெரிந்த பின்னரே முதலீடுகளை செய்ய வேண்டும். எந்த ஒரு நிதி முடிவுகளையும் நன்கு ஆராய்ந்த் பின்னரே எடுக்க வேண்டும். முக்கியமாக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டில் நல்ல நிதி நன்மைகளைப் பெறக்கூடும். மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களின் வருமானம் உயரும். முக்கியமாக கடன் பிரச்சனைகளை அடைப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிதி ரீதியாக சில சவால்களை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டில் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி கட்டுப்படுத்தினால், உங்கள் நிதி நிலை படிப்படியாக வலுவடையும். முக்கியமாக குரு பகவானின் அருளால் நல்ல நிதி பலன்கள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் சில சவால்களை சந்திப்பார்கள். இந்த ஆண்டில் பண பிரச்சனைகளை சந்தித்தாலும், உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதுவும் மே மாதத்திற்கு பின் குருவின் நிலையால் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டில் வரவு மற்றும் செலவுகளுக்கு இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமித்து வைக்க முடியும். பிப்ரவரி வரை நிறைய செலவுகளை சந்தித்தாலும், அதற்கு பின் உங்கள் செலவுகள் குறையும். வியாபாரம் செய்பவர்கள் பிப்ரவரி மாதத்திற்கு பின் எதிர்பார்ப்பதை விட நிறைய லாபத்தைப் பெறுவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக சுமாராக இருக்கும். அதுவும் மோசமான நிதி முடிவுகளை எடுப்பீர்கள். நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். ஆனால் வருமானம் நன்றாக இருக்கும். அதில் எந்த பிரச்சனையும் இருக்காது. செலவுகளை கட்டுப்படுத்தினால் எந்த பிரச்சனையையும் சந்திக்கமாட்டீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும். இந்த ஆண்டில் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். நிதி நிலையை மேம்படுத்த வேண்டுமானால், செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் சில நிதி சவால்களை சந்திக்க நேரிடும். ஆனால் ஆகஸ்ட் முதல் நிதி நிலை மீண்டும் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, December 27, 2023, 16:40 [IST]
Desktop Bottom Promotion