Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
நடிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த நடிகைகள்!
Female Politicians In India: சினிமாக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு காலம் காலமாக இருந்து வருகிறது. அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா அம்மா முதல் ஜெயா பக்ஷன் வரை அரசியலில் அடியெடுத்து வைத்த நடிகைகள் ஏராளம்.
அரசியலில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அதனால் தான் இன்னமும் பெண்களுக்கு அரசியலில் ஒரு தனி இடம் உண்டு. மக்களிடையே பெண்களுக்கென்று ஒரு செல்வாக்கும் உண்டு. சினிமாத் துறையில் மட்டுமல்ல நாட்டுக்கும் எங்களால் நல்லது செய்ய முடியும் என அரசியலில் சாதித்த பெண்மணிகள் ஏராளம். அப்படி நடிகைகளாக இருந்து அரசியல்தலைவர்களாக மாறிய நடிகைகளைப் பற்றித் தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.

நடிகை கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் சிறந்த நடிகை மட்டுமல்ல எதையும் தைரியமாக எதிர்த்து நிற்கக் கூடியவர். அடிக்கடி தன்னுடைய கருத்துக்களை சுதந்திரமாக பேசக் கூடிய நபர். இவரின் நடிப்புத் திறமைக்கு இன்னமும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் திடீரென அரசியலில் குதித்து நமக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார். தற்போது நடக்க இருக்கிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதன் படி அரசியலில் களமிறங்கிய நடிகைகளின் பட்டியலில் இப்பொழுது இவரும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரோன் கெர்
கிரோன் கெர் சிறந்த நாடக நடிகையாக வலம் வந்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். மே 2014 இல், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, சண்டிகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயா பக்ஷன்
இந்தி திரையுலகில் பல வேடங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர். மூத்த இந்தி நடிகையான ஜெயா பக்ஷன் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய உறுப்பினர் ஆவார். அவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் உத்தரபிரதேச மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேமமாலினி
இவர் இந்தி திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகை ஆவார். இவர் அரசியலில் களமிறங்கி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் இருந்து மக்களவைக்கு பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவின் ' கனவுப் பெண்' என அழைக்கப்படுபவர்.
ஸ்மிருதி ராணி
ஸ்மிருதி ராணி தொலைக்காட்சியில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், பல்வேறு அமைச்சர் பொறுப்புகளையும் பெற்றுள்ளார். அரசியலில் தன்னுடைய பேச்சுத் திறமையால் சாதித்து காட்டியவர்.
அம்மா ஜெயலலிதா அவர்கள்
எம். ஜி ஆருக்கு அடுத்த படியாக ஒரு கட்சியை திறம்பட வழிநடத்தியவர் ஜெயலலிதா அவர்கள் ஆவார். மக்கள் இவரை அம்மா என்று அழைக்கின்றனர். வலுவான தலைமைப் பண்புகள் மற்றும் நலத்திட்டங்கள் என அவரது அரசியல் பயணம் சிறந்த ஒன்றாகும். அவரின் அன்பு உள்ளங்களால் மக்கள் மனதை வென்று தமிழகத்தின் முதல்வராக பலமுறை பணியாற்றி உள்ளார்.
குஷ்பு
குஷ்பு அவர்கள் ஒரு சிறந்த நடிகையாகவும் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை தன்னுடைய அரசியல் பயணத்தை சிறப்பாக செய்து வருகிறார்.
ஜெயப்பிரதா அவர்கள்
பாலிவுட் உட்பட பல தமிழ்ப் படங்களிலும் நடித்தவர். கமல்ஹாசனுடன் இணைந்து சலிங்கை ஒலி படத்தில் சிறப்பாக நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர். பன்முக நடிகையான ஜெயப்பிரதா அவர்களும் அரசியலில் இருந்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியில் (டிடிபி) சேர்ந்த அவர் பின்னர் சமாஜ்வாதி கட்சிக்கு மாறினார். ஜெயப்பிரதா ராஜ்யசபா மற்றும் லோக்சபா இரண்டிலும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நக்மா
தமிழ், இந்தி என பல படங்களில் நடித்தவர். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து அரசியல் பயணத்தை சிறப்பாக செய்து வருகிறார். தேர்தல்களின் போது அக்கட்சிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.



Click it and Unblock the Notifications











