February Horoscope 2024: பிப்ரவரி மாசத்துல இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...

February 2024 Monthly Horoscope: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளது.

இந்த யோகங்களால் பிப்ரவரி மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

February 2024 Monthly Horoscope In Tamil

கீழே 12 ராசிக்காரர்களும் பிப்ரவரி மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என பிப்ரவரி மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2024 பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அவ்வப்போது நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் பணத்தை சேமிப்பதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிதி முடிவுகளை மிகவும் சிந்தனையுடன் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

புதிய வாகனம், சொத்து போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த நேரம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடலாம், இருப்பினும் உங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் நல்ல வெற்றியை பெறுவீர்கள். வேலை சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் தாயின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரிக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் வேலை செய்பவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கடினமாக உழைத்தால், அதற்கான நல்ல பலனைப் பெறுவீர்கள். இருப்பினும், இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகளிடமும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இம்மாதத்தில் தேவையில்லாத விஷயங்களைப் புறக்கணித்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகளுக்கு இந்த மாதம் மிகவும் பரபரப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் புதிய வருமானம் பெறலாம். இது தவிர, சொத்து தொடர்பான சில லாபத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பும் உள்ளது. இருப்பினும் பணப் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். தாம்பத்திய வாழ்வில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உடல்நலம் பலவீனமாக இருக்கும். வயிறு அல்லது கால்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தின் தொடக்கம் காதலிப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு மோதல்கள் ஏற்படலாம். உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது, ஆனால் பணம் தொடர்பான எந்தவொரு வேலையையும் மிகவும் சிந்தனையுடன் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இல்லையெனில் நீங்கள் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வியாபாரிகளுக்கு மாதத்தின் ஆரம்பம் லாபகரமாக இருக்கும். நீங்கள் விரும்பிய லாபத்தைப் பெறுவீர்கள். உடல்நலம் பலவீனமாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதம் வேலை செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் இந்த மாதம் சிறப்புப் பலன்களைப் பெறலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத தொடக்கத்தில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

நிதி ரீதியாக சவால்கள் நிறைந்ததாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் நல்லது. இந்த மாதத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. முதலீடுகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். காதலைப் பொறுத்தவரை இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். திருமணமானவராக இருந்தால், துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதம் தொழில் ரீதியாக சவால்கள் நிறைந்ததாக இருக்கும். உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். இது தவிர, உங்கள் எதிரிகளும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நிதி ரீதியாக, மாதத்தின் ஆரம்பம் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கு பிறகு செலவுகள் அதிகரித்து, பிரச்சனைகளும் அதிகரிக்கும்.

ஆடம்பரத்திற்காக பணத்தை தாராளமாக செலவழிப்பீர்கள், இது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீட்டில் அமைதியையும் மகிழ்ச்சியையும் பராமரிக்க, உங்கள் வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினால் நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்காது. மாதத் தொடக்கத்தில் திடீர் செலவுகள் கூடும். அத்தகைய சூழ்நிலையில், அன்றாட செலவுகளைச் சந்திப்பதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். மாதத்தின் நடுப்பகுதியில் உங்கள் வருமானம் கூடும். பணம் சம்பந்தமான எந்த ஒரு முக்கியமான வேலையையும் செய்ய இந்த நேரம் உங்களுக்கு ஏற்றதல்ல. வேலை செய்பவர்களுக்கு மாதத்தின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இம்மாதத்தில் உங்கள் எதிரிகளைத் தோற்கடித்து முன்னேறுவீர்கள், மேலும் உங்கள் நிலை வலுவடையும். வியாபாரிகள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்தால் நல்லது. கூட்டாண்மையில் வணிகம் செய்ய விரும்பினால், கவனமாக சிந்திக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். இருப்பினும், உங்கள் தாயுடனான உங்கள் உறவு மோசமடைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் அலட்சியம் காட்டினாலும் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதமானது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. காதலைப் பொறுத்தவரை, இம்மாதம் நன்றாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவரின் தேவைகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கிடையேயான காதல் இன்னும் ஆழமாக மாறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைப்பார்கள். இந்த மாதத்தில், உங்கள் செயல்திறனில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். உங்கள் வணிக விரிவாக்கத் திட்டங்கள் வெற்றியடையும். தொடர்ந்து செலவுகள் அதிகரிப்பதால் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். அதே சமயம் இம்மாதத்தில் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். இல்லையெனில் கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பு வீணாகிவிடும்.

வணிகர்களுக்கு மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். ஆனால் போக போக சற்று கடினமாகவே இருக்கும். உங்கள் முக்கிய வணிக முடிவுகளை அவசரத்தில் எடுக்க வேண்டாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். இம்மாதத்தில் வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கலாம். சகோதர சகோதரிகளின் ஆதரவுடன், உங்கள் நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையும் முடிவடையும். இருப்பினும், மாதத்தின் நடுப்பகுதி உங்களுக்கு சற்று மன அழுத்தமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! பிப்ரிவரி மாதம் உங்களுக்கு நிதி ரீதியாக நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்வீர்கள். பணம் சம்பாதிக்க சில நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். இந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் நிதி நிலையில் பெரிய ஏற்றம் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சவாலானதாக இருக்கும். அலட்சியமாக இருந்தால், உங்கள் முன்னேற்றம் நின்று போகலாம்.

நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து, நீண்ட காலமாக பெரிய லாபத்தை எதிர்பார்த்திருந்தால், உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாதத்தின் நடுப்பகுதியில் உங்கள் துணையுடன் பெரிய சண்டை வரலாம். ஆரோக்கியமாக இருக்க உங்கள் தினசரி வழக்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும். இது தவிர, தேவையற்ற கவலைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. இந்த மாதத்தில் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் இந்தப் பயணம் முன்னேற்றத்திற்கான கதவைத் திறக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் ஏதேனும் ரிஸ்க் எடுத்தால், தகுந்த பலன்களைப் பெறலாம்.

அரசாங்கத் துறையில் இருப்பவர்களால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மாதத்தின் தொடக்கத்தில் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் மாதத்தின் நடுப்பகுதியில் நிலைமை சீராகும். இந்த நேரத்தில் நீங்கள் பணம் பெறுவீர்கள் மற்றும் உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். நீங்கள் சிறிய விஷயங்களுக்கு கோபப்படலாம். உங்கள் துணையுடன் தேவையற்ற சண்டைகள் வரும். மாத இறுதியில் உங்கள் தந்தையுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதமானது உங்களுக்கு சில புதிய வாய்ப்புக்களைக் கொண்டு வரும். பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்கள் சம்பளம் உயரும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் வேலையை தேடுகிறீர்களானால், நீங்கள் விரும்பிய வேலையைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் லாபம் ஈட்ட கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

இந்த மாதத்தில், எளிதாக முடிக்கும் வேலைகள் கூட தடைகளை சந்திக்க நேரிடும், ஆனால் நீங்கள் முழு தைரியத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்தால், உங்கள் கூட்டாளருடன் தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பரஸ்பர பிரச்சனைகள் தீரும். உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவு இன்னும் வலுவடையும். சிறிய உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டாலும், உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுக வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதம் அரசு வேலை செய்பவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால், இந்த மாதம் உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சற்று கடினமாக இருக்கும். நீங்கள் பெரிய சவால்களை சந்திக்க நேரிடலாம்.

முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படலாம். இருப்பினும், உங்கள் வணிகம் படிப்படியாக முன்னேறும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இம்மாதத்தில் நிதி நெருக்கடி நீங்கும், உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இம்மாதம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் சரியான வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

Story first published: Wednesday, January 31, 2024, 23:16 [IST]
Desktop Bottom Promotion