Latest Updates
-
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்!
பிப்ரவரி மாதத்தில் லட்சுமி தேவியின் அருளால் இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது...
February 2024 Monthly Finance Horoscope In Tamil: பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டது. அனைவருக்குமே ஒரு புதிய மாதத்தில் நுழையும் போது அந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். முக்கியமாக நிதி ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம்.
அதற்கு ஜோதிடம் பெரிதும் உதவி புரியும். ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகளைக் கொண்டு, ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் புதன், செவ்வாய், சுக்கிரன், சூரியன் போன்ற கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது, அனைத்து ராசிக்காரர்களின் நிதி நிலையிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாகவும், இன்னும் சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலையும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது வேலையைப் பொறுத்தவரை ஏற்றஇறக்கம் நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் மாதத்தின் நடுப்பகுதியில் சில நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். வேலையை மாற்ற நினைத்தால், சற்று யோசித்து முடிவெடுக்க வேண்டும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்ற பின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரிடம் இருந்து நல்ல நிதி உதவியைப் பெறுவீர்கள். இம்மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய வேலையை செய்ய திட்டமிட்டால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். நிதி நிலை மேம்படும். அலுவலகத்தில் புதிய திட்டங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகளைத் தொடங்குவீர்கள். அதில் நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல பொருள் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் வேலையில் பல பிரச்சனைகள் இருக்கும். ஆயினும் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் ஒரு பெரிய தொகையை கடனாக வாங்கலாம். எதிரிகள் உங்கள் வேலையில் தடையை ஏற்படுத்துவார்கள். வேலையை மாற்ற நினைத்தால், அதை இம்மாதத்தில் செய்யாதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! தொழில் ரீதியாக இம்மாதத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் போட்டியாளர்கள் வலுவாக இருப்பார்கள். அதனால் பணியிடத்தில் சற்று பெரிய இழப்புக்களை சந்திப்பீர்கள். இம்மாதத்தில் புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்யுங்கள். நம்பிக்கையானவர்களுடன் மட்டும் நிதி பரிவர்த்தனைகளை வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், பெரிய நஷ்டத்தை சந்திப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிலுவையில் உள்ள வேலைகளை மீண்டும் தொடங்கி, சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்வதாக இருந்தால், நல்ல கூட்டாளரை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திப்பீர்கள். பணிபரிபவர்களுக்கு இம்மாதத்தில் பெரிய சலுகை கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பங்குச் சந்தையில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதமானது நிதி ரீதியாக ஏற்றஇறக்கம் நிறைந்தாக இருக்கும். ஆனால் நிதி நிலையில் சரிவு எதுவும் இருக்காது. நெருங்கிய நண்பர்களின் உதவியால் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு சில புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் நிதி நிலை பற்றி கவலைப்பட வேண்டிய சூழல் ஏற்படாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் தொழில் ரீதியாக சில பெரிய பிரச்சனைகளை சந்திக்கலாம். பணியிடத்தில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். புத்திசாலித்தனமாக எந்த முதலீடுகளையும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நம்பிக்கையானவர்களுடன் மட்டும் பண பரிவர்த்தனைகளை செய்யுங்கள். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த மாதத்தில் பெரிய முதலீடுகளை செய்வீர்கள். அதன் பலர் எதிர்காலத்தில் நன்றாக கிடைக்கும். உங்கள் வணிகத்தில் மாற்றங்களை செய்ய விரும்பினால், சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இம்மாதத்தில் தொழிலில் மாற்றங்களை செய்வது நல்லதல்ல. தெரியாதவர்களுக்கு பெரிய தொகையை கடனாக கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்
மகரம்
மகர ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதம் நீங்கள் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக நல்ல பலனளிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைத் துறையில் பெரிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் நிதி ரீதியாக சரிவைக் காண்பீர்கள். இருப்பினும், உங்கள் கடின உழைப்பின் மூலம் உங்கள் நிலையை மீண்டும் வலுப்படுத்த முயற்சிப்பீர்கள். கடின உழைப்பினால் பல வேலைகளை மீட்டெடுப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாதத்தின் கடைசியில், வியாபாரத்தில் பெரிய வெற்றியை பெறலாம். சிக்கிய பணத்தை மீண்டும் பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதம் நிதி நிலையில் சரிவைக் காண்பீர்கள். உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் உதவியை நீங்கள் நாட வேண்டியிருக்கும், அதிலிருந்து நீங்கள் மீள சிறிது நேரம் ஆகலாம். இந்த நேரத்தில் அதிக ஆபத்துக்களை எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் உடல்நலம் தொடர்பான காரணங்களால், உங்கள் நிதி நிலை பெரும் சரிவை சந்திக்கும்.



Click it and Unblock the Notifications