Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
Father's Day 2024: தந்தையர் தினத்தன்று உங்க அப்பாவுக்கு அவங்க ராசிப்படி பரிசு கொடுத்து அசத்துங்க..
Father's Day 2024: தந்தையர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்று கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தந்தையர் தினம் ஜூன் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் தந்தையர்களை அனைவருமே சிறப்பாக உணர வைக்க விரும்புவோம்.
அதற்காக அவர்களுக்கு பரிசுகளை வழங்குவது, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது, அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுப்பது என்று பல விஷயங்களை செய்வோம். அதில் பரிசுகளை தேர்ந்தெடுக்கும் போது நிச்சயம் அனைவருக்குமே ஒருவித குழப்பம் இருக்கும். உங்களுக்கும் உங்கள் தந்தைக்கு என்ன பரிசை வழங்குவது என்று தெரியவில்லையா? அப்படியானால் இந்த தந்தையர் தினத்தன்று அவர்களின் ராசிக்கேற்ற பரிசை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்துங்கள்.

மேஷம்
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் தலைமைத்துவ திறமைக்கு பெயர் பெற்றவர்கள். இந்த திறமையை நிச்சயம் உங்கள் தந்தையிடம் நீங்கள் காணலாம். இவர்கள் எப்போதும் பொறுப்புகளை ஏற்க தயாராக இருப்பார்கள் மற்றும் திட்டமிடுவதிலும், அதை செயல்படுத்துவதிலும் வல்லவர்கள். எனவே இந்த ராசியை சேர்ந்த தந்தைக்கு ஒரு க்ரூமிங் செட்டை பரிசாக வழங்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அதிக அக்கறையானவர்கள். இவர்களுக்கு தங்கள் மீது மற்றவர்கள் அன்பு காட்டுவது பிடிக்கும். எனவே இந்த தந்தையர் தினத்தில் உங்கள் தந்தைக்கு சிறப்பான பரிசை வழங்க நினைத்தால், அவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுங்கள். அதற்கு அவர்களுடன் வெளியே அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு செல்லலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இப்படி நினைப்பதாலோ என்னவோ, இது அவர்களை மிகவும் சோர்வடையச் செய்யும். எனவே இந்த ராசியை சேர்ந்த தந்தைக்கு அவர்களின் உடல் சோர்வைப் போக்க நல்ல ஸ்பாவில் பாம்பரிங் செஷனை பரிசளிக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள விரும்புவார்கள். எனவே உங்கள் தந்தையும் நிச்சயம் ஏதாவது கற்று கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். எனவே அவர்களுக்கு எந்த மாதிரியான புத்தகம் பிடிக்குமோ, அதை வாங்கிக் கொடுக்கலாம். அதோடு அவருடன் சிறிது நேரத்தை செலவிடலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருப்பார். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் முறையாக நிறைவேற்றுவார். எனவே இந்நாளில் அவருக்கு பிடித்ததை வாங்கி பரிசளிக்கலாம். இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். இது தவிர, அவருடன் வெளியே சென்று நல்ல நேரத்தை செலவிடலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் நடைமுறை இயல்புக்கு நன்கு அறியப்பட்டவர்கள். உங்கள் தந்தை இந்த ராசியைச் சேர்ந்தவரானால், அவர் பயன்படுத்தும் வகையிலான பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம். உதாரணமாக, கைக்கடிகாரம், காலணிகள், உடைகள் போன்றவற்றை வழங்கலாம்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் கலைத்திறன் கொண்டவர்களாக இருப்பர். படைப்பாற்றல் மற்றும் கலை மீதான காதலைக் கொண்டிருப்பார்கள். எனவே இந்த ராசியை சேர்ந்த உங்கள் தந்தைக்கு கலை தொடர்பான பொருட்களை பரிசளிக்கலாம். அதுவும் உங்கள் தந்தைக்கு கலை சேகரிப்பு பிடிக்குமானால், ஓவியங்கள், அலங்கார பொருட்கள் மற்றும் அவர்களுக்கு பிடித்ததை வழங்குவரி சரியான பரிசாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் அக்கறையுடனும், அன்புடனும் இருப்பார்கள். இருப்பினும், மற்றவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதை விட அவர்கள் அதிகம் விரும்புவது எதுவும் இல்லை. எனவே உங்கள் தந்தை இந்த ராசிக்காரர் என்றால் அவர்கள் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தும் தனித்துவமான பொருட்களை வாங்கி பரிசளியுங்கள். அதோடு அவருடன் நல்ல நேரத்தை செலவிடுங்கள்.
தனுசு
தனுசு ராசிககாரர்கள் சாகசங்களையும், த்ரில்லையும் விரும்புவார்கள். எனவே இவர்களுக்கு சஸ்பென்ஸ் நாவலை வாங்கிக் கொடுக்கலாம் அல்லது அவர்களுக்குப் பிடித்த சாகச இடத்துக்கு அழைத்துச் சென்று அவருடன் நல்ல நேரத்தை செலவிட்டு மகிழலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இவர்களுக்கு வேலை செய்ய பிடிக்கும் மற்றும் தங்கள் வேலையை அதிகம் விரும்புவார்கள். எனவே இத்தகையவர்களுககு அவர்களின் வேலைக்கு உதவும்படியான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றியே யோசிப்பார்கள். எல்லா பொறுப்புகளையும் எடுத்துக்கொள்வார்கள் மற்றும் பெரும்பாலும் தங்களை கவனித்துக் கொள்ள மறந்துவிடுவார்கள். இவர்களுக்கு மற்றவர்கள் மீது அன்பைப் பொழிவது பிடிக்கும். எனவே இந்த ராசியை சேர்ந்த தந்தைக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய சிறந்த பரிசு என்றால் அது அவர்களுக்காக அவர்கள் நேரத்தை செலவிடுவது தான். அதற்கு தந்தையுடன் ஸ்பா செல்லலாம் அல்லது அவருடன் வெளியே ஒரு நாள் செலவிடலாம். அதோடு உங்கள் தந்தையை பாராட்டுவதோடு, கொஞ்சம் அன்பையும் அக்கறையையும் அவர்மீது பொழிய வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இவர்களுக்கு கலைகளின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும். எனவே இந்த ராசியைச் சேர்ந்த உங்கள் தந்தைக்கு பெயிண்டிங்கில் ஆர்வம் இருந்தால், அவர்களுக்கு அந்த பொருட்களை வாங்கித் தரலாம். ஒருவேளை கலைப் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் இருந்தால், அவர்களுக்கு அந்த கலைப் பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம்.



Click it and Unblock the Notifications