Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Father's Day 2023: தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவை எப்படியெல்லாம் சந்தோஷப்படுத்தலாம்? இதோ சில வழிகள்...!
Father's Day 2023: தந்தையர் தினம் என்பது எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான நாளாகும். இந்த நாளில் எல்லாரும் தங்கள் தந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள். அதற்காக தங்கள் அப்பாவுக்கு பிடித்த பரிசுப் பொருட்கள் மற்றும் பிடித்த இடங்களுக்கு கூட்டிச் செல்வது போன்ற பல விஷயங்களை நாம் செய்வதுண்டு.
இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க ஆசைப்பட்டால் அதற்காக நாங்கள் சில ஐடியாக்களை உங்களுக்கு சொல்லுகிறோம். இந்த ஐடியாக்கள் உங்களுக்கு பல விதங்களில் கை கொடுக்கும். இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவிற்கு நீங்கள் நிறைய சர்ப்ரைஸ் கொடுத்து அவரை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும்.

இதற்காக நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களே உங்கள் அப்பாவை மகிழ்ச்சியாக வைக்கும். சரி வாங்க இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவை எப்படியெல்லாம் சந்தோஷப்படுத்தலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
அவருக்கு பிடித்த சில உணவுகளை பரிசளிக்கலாம்
நீங்கள் விரும்பும் ஒரு நபருக்கு பரிசுப் பொருட்கள் தான் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களுக்கு பிடித்த விஷயங்களைக் கூட நீங்கள் செய்து கொடுக்கலாம். எனவே இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவுக்கு பிடித்த தின்பண்டங்கள், விருந்துகள் மற்றும் உணவுகளை சமைத்து சர்ப்ரைஸ் செய்யலாம். நீங்களும் அவரும் இணைந்து சாப்பிடும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.
அவருக்காக சில வேலைகளை நீங்கள் முடித்து கொடுக்கலாம்
தினசரி உங்கள் அப்பா அதிகமான வேலைகளை செய்து வருகிறார் என்றால் அவருக்காக நீங்கள் சில வேலைகளை செய்து கொடுக்கலாம். அவருடன் சேர்ந்து தோட்டத்தை பார்த்துக் கொள்வது, வீட்டை சுத்தம் செய்வது, கார் மற்றும் பைக் வாகனங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை அவருக்கு செய்து கொடுக்கலாம். இதன் மூலம் அவருக்கு சிறிது ஓய்வு கிடைக்கும். அவர் ஓய்வெடுக்கும் சமயத்தில் இருவரும் இணைந்து மனம் விட்டு பேசி மகிழலாம். இது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தையும் மிகுந்த உற்சாகத்தையும் அளிக்கும்.
அவருக்கு பிடித்தமான ஒன்றை செய்து கொடுங்கள்
ஒவ்வொரு நாளும் அப்பா என்பவர் தன்னுடைய குழந்தைகளுக்காக பல விஷயங்களை செய்து கொடுக்கிறார். உங்களுக்கு பிடித்த பொம்மைகளை வாங்கி கொடுப்பார், உங்களுக்கு பிடித்த படங்களுக்கு கூட்டிச் செல்வார். இப்படி ஏராளமான விஷயங்களை அவர் செய்வார். ஆனால் நீங்கள் அவருக்கு என்ன செய்தீர்கள். இந்த தந்தையர் தினத்திலாவது அவருக்கு பிடித்த விஷயங்களை அவருக்கு நீங்கள் செய்து கொடுக்கலாம். அவர் ரசிக்கும் பொழுது போக்கு விஷயங்களை நீங்கள் செய்து கொடுக்கலாம். அவருடன் சிறிது நேரம் செலவிடுங்கள். இதுவே அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை பெற்றுத் தரும்.
தந்தையர் தினத்தை கொண்டாடுங்கள்
இந்த தந்தையர் தினத்தில் உங்கள் தந்தையை நீங்கள் சிறப்பாக உணர வைக்கலாம். பரிசுப் பொருட்கள் மூலம் அவரை ஆச்சர்யப்படுத்துவது, வீட்டில் ஸ்பா அமைத்து கொடுப்பது, ஓய்வெடுக்க நேரம் கொடுப்பது, அவரை புத்துணர்ச்சியாக வைக்க பானங்கள் தயாரித்து கொடுப்பது போன்ற பல விஷயங்களை நீங்கள் செய்து வரலாம்.
படுக்கையிலேயே காலை உணவை தயாரித்து கொடுங்கள்
காலை உணவை தயாரித்து அவர் எழுந்திருக்கும் போதே சர்ப்ரைஸாக கொடுக்கலாம். அவருக்கு பிடித்த காலை உணவு அவரை நாள் முழுவதும் உற்சாகப்படுத்தும். மேலும் எழுந்திருக்கும் போதே கிடைக்கும் வரவேற்பு அவரை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். காலை உணவை அவருடன் சேர்ந்து உற்சாகமாக சாப்பிடுங்கள்.
சர்ப்ரைஸ் பயணத்தை அவருக்கு பரிசளிக்கலாம்
இதற்கு நீங்கள் ஆடம்பரமாக செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர் ரசிக்கும் விதத்தில் விளையாட்டு அல்லது வெளிப்புற நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லலாம். அவருக்கு பிடித்த இடங்களுக்கு சாலைப் பயணம் மேற்கொள்ளலாம். அவரை கடற்கரைக்கு அழைத்துச் செல்லலாம். அவருக்கு பிடித்த இசை கச்சேரி அல்லது இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுக்கலாம். இந்த மகிழ்ச்சியான தருணங்களை உங்கள் கேமராவில் படம் பிடிக்க மறந்து விடாதீர்கள்.
பரிசுப் கூப்பனை பரிசளியுங்கள்
இந்த தந்தையர் தினத்தில் நீங்களாகவே கிரியேட்டிவ் ஆக ஒரு பரிசு கூப்பனை தயார் செய்யலாம். இதன் மூலம் அவருக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். இந்த தந்தையர் தினம் உங்களுக்கு சிறப்பான அமைய வாழ்த்துக்கள். இந்த மறக்க முடியாத நினைவுகளை புகைப்படமாக எடுத்து அதையும் உங்கள் தந்தைக்கு நீங்கள் பரிசாக வழங்கலாம்.



Click it and Unblock the Notifications