Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மே மாதத்தில் பிறந்தவர்களின் சூப்பர் குணங்கள் இவைதான்..!
மே மாதத்தில் பிறந்தவர்கள் பெரிய வெற்றியை அடைவார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். பலர் இந்த மாதத்தை புதனுடன் தொடர்புடையதாகக் கருதுகின்றனர். ரவீந்திரநாத் தாகூர், சத்யஜித் ரே, நந்தமுரி தாரகராம ராவ், ரஸ்கின் பாண்ட், அனுஷ்கா சர்மா, மாதுரி தீட்சித், விக்கி கௌஷல் போன்ற பல பிரபலங்களும் மே மாதத்தில் பிறந்தவர்கள். உங்கள் பிறந்த தேதி, மாதம், நேரம் போன்றவற்றின் அடிப்படையில், ஜோதிடம், எண் கணிதம் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பிறந்தவருக்கு என்ன மாதிரியான நடத்தை, குணங்கள், இயல்புகள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அந்தவகையில் இன்று இந்த பதிவில் மே மாதம் பிரந்தவர்களின் குணாதிசயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்... மே மாதத்தின் அதிபதி புதன்.. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். தங்கள் வேலையைச் செய்ய எந்த எல்லைக்கும் செல்வார்கள். மேலும், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் விரும்பியபடி வாழ முயற்சி செய்வார்கள். இதனுடன் அவர்கள் நல்ல பணம் சம்பாதிப்பர்கள்.

மே மாதத்தில் பிறந்தவர்களும் படைப்பாற்றல் மிக்கவர்கள். எந்தப் பணியையும் அழகாகச் செய்வார்கள். படைப்பாற்றலுடன், இந்த மக்கள் சாகசத்தையும் செய்ய விரும்புகிறார்கள். மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் உற்சாகமாக இருக்கும்.
மே மாதத்தில் பிறந்தவர்கள் தொடர்பு மற்றும் உரையாடல் அல்லது சமூக தொடர்புகளில் நல்ல திறமையை கொண்டு இருப்பார்கள். தகவல்தொடர்பு தவிர, இந்த நபர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் சிறந்த திறன் கொண்டவர்கள். மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதனால் அவர்கள் எப்போதுமே எந்த வேலையும் செய்யாமல் இருக்க மாட்டார்கள். சுறுசுறுப்பாகதான் இருப்பார்களாம். மற்றவர்களின் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்பது இவர்களுக்குத் தெரியும். இவர்களின் ஆளுமை மற்றவர்களை மயக்கும் ஆற்றல் கொண்டது, அவர்களின் வசியத்தில் இருந்து தப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவர்களை சுற்றி எப்பொழுதும் கூட்டம் இருக்கும்.
இவர்கள் பெரிய கனவு காண்பவர்கள், ஆனால் ஒருபோதும் யதார்த்தத்தை விட்டுவிட மாட்டார்கள். இவர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக பெரிய கனவு காண தயங்குவதில்லை. இலட்சியங்கள் மற்றும் கனவுகள் என்று வரும்போது இவர்கள் அதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும் மே மாதத்தில் பிறந்தவர்கள் படிப்பில் வித்தகர்களாக இருப்பார்கள். எதையும் ஆராய்ந்து படிக்க கூடியவர்கள். இவர்கள் புத்தகம், பத்திரிகைகள், கட்டுரைகள் வாசிப்பதில் மிகவும் ஆர்வம் இருக்கும். இவர்கள் வாசிப்பு. எழுதுதல். புகைப்படம் உள்ளிட்ட கலைத்துறையில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள். இது தொடர்பான தொழிலையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications