Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க!
இதுல உங்க கண்ணு எந்த கலர்-ன்னு சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்...
Eye Color and Personality: ஆளுமை சோதனைகள் சற்று வேடிக்கையாக இருந்தாலும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். அதே சமயம் ஒருவரை எளிதில் புரிந்து கொள்ளவும் உதவும். சமீப காலமாக இணையத்தில் ஒருவரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆளுமை சோதனைகள் உலா வருகின்றன.
அதுவும் ஒருவரது மூக்கின் வடிவம், பாதங்களின் வடிவம், விரல்களின் நீளம் போன்ற பலவற்றைக் கொண்டு ஒருவரது உண்மையான குணங்கள் கணித்து கூறப்படுகின்றன. முக்கியமாக ஒருவரது கண்களின் நிறம் அந்நபரின் உண்மையான குணத்தை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும், இது ஒரு வேடிக்கையான மற்றும் ஒருவரை ஆழமாக புரிந்து கொள்ள உதவுகிறது.

என்ன நண்பர்களே, நீங்கள் கண்களின் நிறத்தைக் கொண்டே உங்களின் உண்மையானகுணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கண்ணாடியில் உங்கள் கண்கள் எந்த நிறத்தில் உள்ளது என்பதை பார்த்து, அதற்கான அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. ப்ரௌன் நிற கண்கள்
உங்கள் கண்கள் ப்ரௌன் நிறத்தில் இருந்தால், நீங்கள் தன்னம்பிக்கையான நபர், நட்பானவர், மற்றவர்களுடன் எளிதில் பேசக்கூடியவர். நீங்கள் தோற்றத்தில் மட்டுமின்றி, பேச்சாலும் மற்றவர்களை வசீகரிக்கக்கூடியவர்கள். வலிமையான மனம் கொண்டவர்கள், எவ்வளவு பெரிய பிரச்சனையையும் கையாள்வதில் வல்லவர், கனிவானவர், விசுவாசமான நபர், உங்கள் இலக்குகளை அடையாமல் ஓயமாட்டீர்கள்.
தனிமையை அதிகம் விரும்புபவர். நண்பர்களை உருவாக்க அதிகம் விரும்புவீர்கள். கடினமான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருப்பீர்கள். உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் முன் மற்றவர்களின் கருத்துக்களை கேட்பீர்கள். இதனால் உங்களுடன் பழக நிறைய பேர் விரும்புவார்கள். மற்றவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்ப்பீர்கள். புதிய இடங்களை ஆராய்வதையும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் விரும்புவீர்கள். முக்கியமாக தாராள மனப்பான்மை கொண்டவர்.
2. பச்சை நிற கண்கள்
உங்கள் கண்கள் பச்சை நிறத்தில் இருந்தால், நீங்கள் படைப்பாற்றல் மிக்கவர், அமைதியான நபர் மற்றும் ஆர்வம் அதிகம் நிறைந்தவர். மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளிலும் அமைதியாக இருப்பீர்கள். உங்களின் கண்கள் மட்டுமின்றி, உங்களின் பேச்சும் வசீகரிக்கும் வகையில் இருக்கும். உங்களின் எண்ணங்களை அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமாட்டீர்கள். இதனால் உங்களைப் பற்றி கணிப்பது கடினமாக இருக்கும்.
சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள். உறவுகள் விஷயத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பீர்கள். ஏதாவது ஒன்றை செய்யும் போது, அதை தீவிரமாக எடுத்துக் கொள்வீக்ரள். முக்கியமாக நீங்கள் புத்திசாலியாகவும், தனித்துவமானவராகவும் இருப்பீர்கள். நீங்கள் பொறுமைசாலியாக இருப்பதால், உங்களைக் கோபப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. உங்களுக்கு பிடித்த விஷயங்களை மிகுந்த ஆர்வத்துடனும், கவனமாகவும் செய்வீர்கள்.
3. நீல நிற கண்கள்
உங்கள் கண்கள் நீல நிறத்தில் இருந்தால், நீங்கள் புத்திசாலி, வலிமையான நபர் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் கொண்டிருப்பீர்கள். அதிக சகிப்புத்தன்மையை கொண்டவர்கள். உணர்ச்சிரீதியான பிரச்சனைகளை கையாள்வதில் வல்லவர். இதனால் உங்களை மனதளவில் யாராலும் வீழ்த்தமுடியாது. நீங்கள் எப்போதும் மிகவும் கவனமாக இருப்பீர்கள். மற்றவர்களுடன் அவ்வளவு எளிதில் மனம் திறந்து பேசமாட்டீர்கள்.
ஒரு விஷயத்தில் அல்லது ஒரு வேலையில் முடிவை எடுக்கும் முன் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். இதனால் உங்களை மற்றவர்கள் திமிர்பிடித்தவர்களாக நினைக்கலாம். ஆனால் உங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு உங்களின் அன்பும், அக்கறையும் புரியும். ஒரே விஷயத்தை தினமும் செய்ய உங்களுக்கு சலிப்பாக இருக்கும். இதனால் புதிய அனுபவங்களை அனுபவிக்க அதிகம் விரும்புவீர்கள். எவ்வளவு பெரிய சவால்களையும் மனம் தளராமல் சமாளிப்பீர்கள்.
4. கருப்பு நிற கண்கள்
உங்கள் கண்கள் கருப்பு நிறத்தில் இருந்தால், நீங்கள் நம்பகமானவர், வலுவான உள்ளுணர்வு கொண்டவர், பொறுப்பானவர், விசுவாசமானவர் மற்றும் கடின உழைப்பாளி. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை தீவிரமாக எடுத்து செய்வீர்கள். எந்த ஒரு வேலையை கொடுத்தாலும், உங்களின் சிறந்ததை கொடுப்பீர்கள். வலுவான பணி நெறிமுறை மற்றும் நம்பிக்கையான அணுகுமுறை உங்களை வேலையில் தனித்துக் காட்டுகிறது.
இயற்கையாகவே தலைமைப்பண்பைக் கொண்டவர்கள். இதனால் ஒரு பொறுப்பை ஏற்பதிலும், முடிவுகளை எடுப்பதிலும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இருந்தாலும் உங்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ளமாட்டீர்கள். இது உங்களின் ஆளுமைக்கு சற்று மர்மத்தை சேர்க்கிறது. உங்களின் செயல்கள் வார்த்தைகளை விட அதிகமாக பேசும். நீங்கள் வெளிப்படையாக எதைவும் வெளிப்படுத்தாவிட்டாலும், உங்களை நன்கு அறிந்தவர்கள் உங்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications