Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
7 உலக அதிசயத்தையும் 6 நாளில் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ள மனிதர்... எப்படி இது சாத்தியமாச்சு தெரியுமா?
கின்னஸ் சாதனைகளில் இடம் பெறுவது என்பது பலரின் கனவாகும், ஆனால் அனைவராலும் அந்த கனவை நிறைவேற்ற முடிவதில்லை. கின்னஸ் உலக சாதனை என்பது உலகளவில் தனிநபர்களால் நிறைவேற்றப்பட்ட மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களின் தொகுப்பாகும்.
சில சமயங்களில் இந்த சாதனைகள் ஆச்சரியமளிப்பதகவும், சில சமயங்களில் அதிர்ச்சியை அதிர்ச்சியை அளிப்பதாகவும் இருக்கும். ஒரு சமீபத்திய சிறப்பம்சமாக ஒரு எகிப்திய ஆண் உலகின் ஏழு அதிசயங்களை மிக குறைவான நேரத்தில் பார்வையிட்டதற்காக உலக சாதனை படைத்துள்ளார். 45 வயதான Magdy Eissa 6 நாட்கள் 11 மணி 52 நிமிடங்களில் உலகின் ஏழு அதிசயங்களுக்கும் பயணித்துள்ளார். உலகின் ஏழு அதிசயங்களையும் பார்வையிட பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தினார். இவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜேமி மெக்டொனால்டின் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை நிறுவனத்துடன் பேசிய திரு மேக்டி, தனது சாதனைப் பாதையைத் திட்டமிடுவது ஒரு "சிறப்புமிக்க" பணியாகும், இதை திட்டமிடுவதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் எடுத்தது. "விமானங்கள், ரயில்கள், பேருந்துகள், சுரங்கப்பாதைகள் மற்றும் போக்குவரத்து மையங்கள் மற்றும் அதிசயங்களுக்கு இடையே நடைபயிற்சி ஆகியவற்றின் சிக்கலான போக்குவரத்துப் பாதையில் நான் செல்ல வேண்டியிருந்தது," என்று அவர் விளக்கினார். "ஒரு தடங்கல் ஏற்பட்டாலும் முழு பயணத்தையும் தடம் புரளச் செய்து, வீட்டிற்குத் திரும்பும் விமானத்திற்கு வழிவகுக்கும்" என்று மேக்டி கூறினார்.
திரு. மேக்டி சீனப் பெருஞ்சுவரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, ரோமின் கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் மச்சு பிச்சு மற்றும் இறுதியாக மெக்ஸிகோவில் உள்ள பண்டைய மாயன் நகரமான சிச்சென் இட்சா ஆகியவற்றை பார்வையிட்டார். சாகசத்தின் ஒவ்வொரு பயணத்துக்கும் போக்குவரத்து நேரங்களை ஆராய்வது, சிறந்த பொதுப் போக்குவரத்து விருப்பங்களை மேப்பிங் செய்வது, தங்குவது பற்றிய திட்டமிடல், லேஓவர்கள் மற்றும் அடுத்த இலக்குக்கான இணைப்புகள் ஆகியவற்றைக் கணக்கிடுவது அவசியம் என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனம் கூறியது.
அதிர்ஷ்டவசமாக மேக்டி தனது திட்டத்தில் எந்த பெரிய இடையூறுகளையும் சந்திக்கவில்லை, ஆனால் அவருக்கு சின்ன சின்ன தடங்கல்கள் இருந்தன. ஒருமுறை, அவர் பெட்ராவிற்கு தினசரி பேருந்தைத் தவறவிட்டார், மற்றொரு முறை அவர் ஏழாவது அதிசயத்திற்குச் செல்லும் வாய்ப்பை நழுவ விட்டார், ஏனெனில் அவர் பெருவிலிருந்து மெக்சிகோவிற்குச் செல்லும் விமானத்தை கிட்டத்தட்ட தவறவிட்டார்.
தனது சிறுவயது கனவை நிறைவேற்றி உலக சாதனையை அடைந்ததன் மூலம், 45 வயதான அவர் தனிப்பட்ட சாதனையின் மகத்தான உணர்வை உணர்கிறேன் என்று கூறினார். "தனிப்பட்ட திருப்திக்கு அப்பால், இந்த சவாலானது, அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களை சிறிது நேரத்தில் விட்டுவிட வழிவகுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
"ஒவ்வொருவரும் பயணம் செய்ய முதலீடு செய்ய வேண்டும், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒரு கட்டத்தில் பெற வேண்டிய மகிழ்ச்சியான அனுபவம் பயணமாகும் . இது மனதைத் திறக்கிறது, எண்ணங்களை விரிவுபடுத்துகிறது, மேலும் புதிய கலாச்சாரங்கள், யோசனைகள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கண்டறிய மக்களை அனுமதிக்கிறது," என்று மேக்டி கூறினார்.
அவருடைய இன்ஸ்டாகிராம் முகவரி: https://www.instagram.com/magdy.eissa/?hl=en



Click it and Unblock the Notifications












