Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
அம்பானி வீட்டு மருமகள்களின் கல்வித் தகுதி தெரியுமா? அதுவும் இந்த மருமகள் அரசியல் படிச்சுருக்காங்களாம்..
Ambani Daughter-in-laws: சமீபத்தில் தான் உலகமே வியந்து பார்க்கும் அளவில் இந்திய தொழிலதிபரும், பணக்காரர்களுள் ஒருவருமான முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி அவர்களின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கோலாகலமாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் வோர்ல்ட் சென்டரில் நடைபெற்றது. பல மில்லியன் செலவில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி, உலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
தற்போது முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு புதிய மருமகள் வந்துவிட்டார். ஆனால் அம்பானி வீட்டின் உறுப்பினராகியுள்ள இளைய மருமகளான ராதிகா மெர்ச்சென்ட் பற்றி இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை. முக்கியமாக இவர் என்ன படித்துள்ளார் என்பதே பலரும் அறிந்திருக்கமாட்டர். எனவே அம்பானி வீட்டு மருமகள்களின் கல்வி தகுதி என்னவென்பதைக் காண்போம்.

ஸ்லோகா மேத்தா
முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியின் மனைவி தான் ஸ்லோகா மேத்தா. இவர் வைர வியாபாரியும், தொழிலதிபருமான ரஸ்ஸல் மேத்தா மற்றும் அவரது மனைவி மோனா மேத்தா ஆகியோரின் மகளாவார். ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் ஒன்றாக படித்தனர் மற்றும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்து, பின் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
பின் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஸ்லோகா மேத்தா திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் தனது பள்ளிபடிப்பை முடித்தார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின் இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் சட்டப் பட்டம் பெற்றுள்ளார்.
ராதிகா மெர்ச்சென்ட்
சமீபத்தில் ஆடம்பரமாக நடந்த முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியை திருமணம் செய்து இளைய மருமகளாக வந்திருப்பவர் தான் ராதிகா மெர்ச்சென்ட். இவர் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா ஆகியோரின் இளைய மகள் ஆவார். ராதிகா மெர்ச்சென்ட் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் படித்தார். அதன் பின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்துள்ளார். இது தவிர ராதிகா மெர்ச்சென்ட் அவரது மாமியார் நீத்தா அம்பானியை போன்றே நன்கு பரதநாட்டியம் ஆடுவாராம்.
க்ரிஷா ஷா அம்பானி
டினா அம்பானி மற்றும் அனில் அம்பானியின் மூத்த மகன் தான் ஜெய் அன்மோல் அம்பானி. இவரை திருமணம் செய்தவர் தான் க்ரிஷா ஷா. இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு கோவிட்-19 சமயத்தில் திருமணம் நடைபெற்றது. க்ரிஷா நிகுஞ்ச் மற்றும் நீலம் ஷா ஆகியோரின் இளைய மகள் ஆவார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவர் UC பெர்க்லியில் இருந்து அரசியல் பொருளாதாரத்தில் BA பட்டமும், அதைத் தொடர்ந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சமூகக் கொள்கை மற்றும் மேம்பாட்டில் MSc பட்டமும் பெற்றுள்ளார்.



Click it and Unblock the Notifications











