Latest Updates
-
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இரட்டை கஜகேசரி யோகம்: மார்ச் 27-ல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Double Gajkesari Yog On 27 March 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை பயணிப்பார். கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் சந்திரன். இப்படி சந்திரனின் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், அவ்வப்போது சில கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மார்ச் 27 ஆம் தேதி சந்திரன் துலாம் ராசிக்குள் நுழைகிறார். துலாம் ராசியில் நுழைந்ததும் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. ஜோதிடத்தின் படி, சந்திரன் மார்ச் 27 ஆம் தேதி துலாம் ராசியில் நுழையும் போது கிரகங்களின் இளவரசனான புதன் மற்றும் குரு பகவான் 4 ஆவது வீட்டில் இருப்பார்கள். இதனால் சந்திரன் புதனுடன் இணைந்து குருவின் பார்வையைப் பெறுவதால் இரட்டை கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது.

துலாம் ராசியில் உருவாகும் இரட்டை கஜகேசரி யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது இரட்டை கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இரட்டை கஜகேசரி யோகமானது திடீர் பண வரவைக் கொண்டு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். சிலர் புதிய வாகனம், சொத்து போன்றவற்றை வாங்கும் வாய்ப்பைப் பெறலாம். மேலும் வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். வணிகர்களுக்கு சிறப்பாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணை, மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் உங்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இரட்டை கஜகேசரி யோகமானது அபரிமிதமான செல்வத்தைத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிவனின் அருளால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்துடனான வாழ்க்கை இனிமையாக இருக்கும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உயர்கல்வி தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் உங்களுக்கு எதிர்காலத்தில் நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரட்டை கஜகேசரி யோகமானது வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களை கொண்டு வரும். சிலர் வெளிநாட்டில் குடியேற திட்டமிடலாம். இக்காலத்தில் முதலீடுகளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதலித்து வந்தால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தருவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications