Latest Updates
-
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா?
தாலி கயிற்றை மாற்றும் போது செய்யக்கூடாத தவறுகள்..!
திருமணம் என்பது "ஆயிரம் காலத்து பயிர்" என்று சொல்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருமனத்தில் இந்திய கலாச்சாரத்தின் படி பலவித சடங்கு, சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்றுதான் மணமகன் பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் தாலியாகும். தாலி என்றால் அது மஞ்சள் கயிறில்தான் இருக்கும்.
ஆனால் காலப்போக்கில் நடைமுறைக்கு ஏற்றவாறு அனைவரும் தாலியை சரடாக மாற்றிப் போட ஆரம்பித்து விட்டனர். ஆனால் அந்த சரடில் கூட சிறிது மஞ்சள் கயிற்றை கட்டிதான் கழுத்தில் போடுவார்கள்.. இந்த சரடை சரியான முறையில் மஞ்சள் கயிறுடன் அணிந்திருந்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் என்பது ஐதீகம்.

அப்படிப்பட்ட இந்த மஞ்சள் கயிற்றை வருடத்திற்கு 2 முறை மாற்றுவது வழக்கம். எனினும் சந்தர்ப்பம், தேவைக்காக இடைப்பட்ட நாளில் தாலி சரடை சிலருக்கு மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு செய்வது சரியா, எந்த நாளில் மாற்றுவது நல்லது? அப்படி மாற்றும் கண்டிப்பாக செய்ய வேண்டியவை என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தாலிக் கயிறுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிலர் தங்கத்திலும், சிலர் மஞ்சள் கயிறாகவும் அணிந்துள்ளனர். அப்படி தங்கத்தில் அணிந்தாலும் கூட கொஞ்சம் மஞ்சள் கயிறு சேர்த்துதான் அந்த சரடை கழுத்தில் கட்டி இருப்பார்கள்.. அப்படி கட்டி இருக்கும் அந்த மஞ்சள் கயிற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவார்கள்.. அல்லது கயிறு மங்கிவிட்டாலும் மாற்றி புது கயிற்றை அணிவார்கள்..
நல்ல நாள் பார்க்க வேண்டும்
அப்படி தாலி கயிற்றை மாற்ற நாள், கிழமை கண்டிப்பாக பார்க்க வேண்டும். தாலி கயிறு மாற்றுவதற்கு சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்று எல்லாமே கூடி வரக்கூடிய அம்சமான நாளாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக கயிறு மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதை மாற்றவேண்டும்.
எந்த கிழமையில் மாற்றலாம்
தாலிக்கயிற்றை புதிதாக மாற்ற திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றுவது நல்ல நாளாக இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.. உங்களுடைய தாலிக்கயிறு அல்லது தாலி சரடை மாற்றும் பொழுது கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்ற வேண்டும். அதுபோல் தாலிக்கயிறு மாற்றும் பொழுது உங்கள் கணவர் அல்லது சுமங்கலியாக இருக்கும் அம்மா, மாமியார் இப்படி வீட்டில் உள்ள யாராவது உங்களுடன் இருக்க வேண்டும். அதுபோல ஒருமுறை தாலிக்கயிறு மாற்ற உட்காரும் பொழுது முடியும்வரை எழுந்திருக்க கூடாது. தேவையான பொருள்களை எல்லாம் எடுத்து உங்கள் அருகில் வைத்து கொள்ளுங்கள். நடுவில் எழுந்திருக்கக் கூடாது..
செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்
1. முக்கியமான விஷயம் கர்ப்பிணிகள் மாற்ற கூடாது. கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு பிறகே மாற்ற வேண்டும். மற்றபடி யார் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
2. தாலி கயிறு மாற்றும் நடைமுறை எளிதுதான். காலையில் பிரம்ம மூகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு திருமாங்கல்யத்தை மாற்ற வேண்டும்.
3. அதன் பிறகு மஞ்சள் குங்குமம், பூ அனைத்தும் வைத்துவிட்டு தாலிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து விட்டு நேராக உங்கள் பூஜை அறைக்கு சென்று சாமியை வணங்கிவிட்டு அதன்பிறகு உங்கள் காலை உணவை சாப்பிடலாம்.
4. அருகில் உள்ள கோவிலுக்கு சென்று மாற்றினால் இன்னும் சிறப்பு.
5. நீங்கள் அணிந்திருந்த பழைய கயிற்றை செடி, கொடிகள் இருந்தால் அதில் கட்டிவிடலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம். வெளியில் குப்பையில் தூக்கி போட வேண்டாம்..
6. தாலி கயிறு மாற்றும் போது திசையும் முக்கியம். கிழக்கு நோக்கி அமர்ந்து தான் தாலிக் கயிற்றை மாற்ற வேண்டும்.
7. பொதுவாக தாலிக்கயிற்றை வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள வேண்டும். கயிறு மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதை மாற்றவேண்டும்.
8. தாலிக்கயிற்றை புதிதாக மாற்ற திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்றவேண்டும். சிலர் வெள்ளிக்கிழமைகளில் மாற்றலாம் என்று சொல்கின்றனர். அப்படி செய்யக்கூடாது.
9. முந்தைய காலத்தில் பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலி அணிவார்கள். பெண்கள் தினமும் அந்த தாலி கயிற்றுக்கு மஞ்சள் தேய்த்துக் குளிப்பார்கள். சிலர் அந்த முறையை இன்னும் செய்கின்றனர்.
10. திருமணமான சில மாதங்களில் கர்ப்பம் தரித்தவுடன் மஞ்சள் பூசிய தாலிக்கயிறு, தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமிநாசினியாக இருந்தது. தாலிக்கயிற்றில் இருக்கும் மஞ்சள் பெண்களின் மார்பகத்தில் எந்த ஒரு நோயையும் அண்ட விடாமல் பாதுகாத்தது.
தாலிக்கயிற்றை மாற்ற உகந்த நாள்:
அனைவரும் பொதுவாக தாலிக்கயிற்றை மாற்றும் நாள் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று தான் மாற்றுவார்கள். ஆடிப்பெருக்கு அன்று எந்தவிதமான நாள் நட்சத்திரம் கிழமைகளையும் பார்க்காமல் தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்ளலாம். புதியதாக திருமணம் ஆனவர்கள் ஆடி 18 அன்று தாலியை மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது. அதை விட்டால் காரடையான் நோன்பு அன்று மாற்றிக்கொள்ளலாம்.அதற்கும் நாள், கிழமை, நேரம் பார்க்க வேண்டியத்தில்லை..



Click it and Unblock the Notifications











