Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வரப்போற தீபாவளில கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Diwali Rasi Palan 2023: தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதர்மத்தை ஒழித்த ஒளியின் வெற்றியாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மக்கள் விநாயகப் பெருமானுக்கும் லட்சுமி தேவிக்கும் பாரம்பரிய வழிபாடுகளைச் செய்கிறார்கள்.
லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற பல்வேறு சடங்குகள் மற்றும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் ஒரு நாள் தீபாவளியாகும். புராணங்களின் படி, தீபாவளி நாளில், லட்சுமி தேவி தனது பக்தர்களின் வீடுகளுக்குச் செல்வார், மேலும் யாருடைய வீடுகளை அவர் விரும்புகிறாரோ, அவர் அங்கு வசிக்கத் தேர்வு செய்கிறார்.

தீபாவளிக்கான ஜோதிடக் கணிப்புகளின் படி இந்த தீபாவளியில் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெற போகிறார்கள், அதேசமயம் சில ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் சில தடங்கல்களையும், துரதிர்ஷ்டத்தையும் சந்திக்க வாய்ப்புள்ளது.அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் ராசி அதிபதியான சுக்கிரன் பலவீனமாக இருப்பதால், ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் காதல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த தீபாவளிக்கு நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு ஏதாவது பரிசளிப்பதை உறுதிசெய்யுங்கள் மற்றும் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.
உங்கள் உணவு பழக்கங்களில் அதிக கவனம் செலுத்துங்கள், துரித உணவுகளை அறவே தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் குடும்ப விஷயங்களில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். கடக ராசிக்காரர்களுக்கு புதிய பொருட்களை கொண்டு வீட்டை அலங்கரிக்கும் வேலை தலைக்கு மேல் இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
இந்த காலக்கட்டத்தில் குறுகிய பயணத்தை எதிர்பார்க்கலாம், இதனால் சோர்வுக்கு ஆளாகலாம். இதய பிரச்சனை உள்ளவர்கள், இந்த வாரம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் ஒரு சிறு பயணத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும், பயணம் செய்வது அவர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிம்ம ராசிக்காரர்கள் வசிப்பிடத்தில் ஏற்படும் சிக்கல்களால் புதிய இடத்திற்கு மாற வேண்டிய சூழல் ஏற்படலாம்.
உங்கள் பேச்சில் அதிக கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்
இந்த வாரம் உங்கள் சிற்றின்ப ஆசைகள் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் துணையுடன் பல பிரச்சினைகள் எழலாம். இது விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலவையான காலகட்டமாக இருக்கும், இந்த காலக்கட்டத்தில் நீங்கள் தனிமையால் அவதிப்படலாம்.
இந்த வாரம் நீங்களாக சென்று மற்றவர்களுடன் பேச வேண்டியிருக்கும். அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். மீன ராசியினருக்கு இந்த காலக்கட்டம் சாதகமான நேரம் அல்ல. உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது பாதிப்புகளைத் தடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

