Latest Updates
-
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன?
வரப்போற தீபாவளி இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டகதவை திறக்கப்போகுதாம்... ராஜயோகத்துக்கு ரெடியா இருங்க...!
Diwali Rasi Palan 2023: இந்தியாவின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றான தீபாவளி வந்துவிட்டது. ஆனால் இந்த பண்டிகை ஞாயிற்றுக் கிழமையில் வருவது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்த தீபாவளி நம் வாழ்க்கையில் நம்முடைய ராசியைப் பொறுத்து பல மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது.
ஒரு தீபாவளி முதல் அடுத்த தீபாவளி வரையிலான காலம் மஹாலக்ஷ்மி வருஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மஹாலக்ஷ்மி வருஷத்தில் சூரியன் உள்ளிட்ட பல கிரகங்களின் நிலைகள் மாறப்போகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்விலும் உயர்வு தாழ்வு மற்றும் சுப பலன்கள் காணப்படும்.

அதன்படி சில ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் அதிர்ஷ்டக்கதவுகள் திறக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
இந்த முறை தீபாவளியில் உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. உங்கள் பணப்பை மகிழ்ச்சியால் நிரப்பப்படும். ராசி அதிபதியின் சிறப்பு அனுகூலத்தால் வேலையிலும், குடும்ப விஷயங்களிலும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். சனி இப்போது மகர ராசியில் இருக்கிறார்.
ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு திரும்புவதால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர். இந்த தீபாவளிக்கு நீங்கள் விரும்பும் வாகனத்தை வாங்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
மிதுனம்
தீபாவளி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றப்போகிறது. இந்த தீபாவளிக்குப் பின் மிதுன ராசிக்காரர்கள் தொழில் துறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நவம்பர் மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும்.
இந்த மாற்றங்களால், இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள், மேலும் திருமண வாழ்க்கையும் குதூகலமாக இருக்கும். பொருளாதாரரீதியாக இந்த மாதம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள் மற்றும் செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
கடகம்
தீபாவளியின் கிரக மாற்றங்கள் கடக ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை தரப்போகிறது. கடக ராசியை சேர்ந்த வியாபாரிகளுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பாக இருக்கும். கடக ராசிக்காரர்கள் பணியிடத்திலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
இந்த மாதம் பொருளாதார நிலையிலும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதல் உறவுகளில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி எதிர்பாராத திருப்பத்தை தரப்போகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம்மும், தீபாவளியும் மிகவும் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முழு வாய்ப்புகளும் உங்களை தேடிவர வாய்ப்புள்ளது, மேலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
நீண்ட காலம் உங்களை துன்புறுத்தி வந்த கடன்களில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் உங்கள் தாயின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணையுடனான உறவிலும் காதலும், இனிமையும் நிறைந்திருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் செல்வாக்கு இந்த தீபாவளியில் அதிகரிக்கும். அவர்கள் தங்களின் தேவைகளை மட்டுமின்றி மற்றவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் கவனித்துக் கொள்வார்கள். வாழ்க்கையில் சாதகமான மாற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
நீண்ட காலம் உங்களை பாடாய்ப்படுத்திய பயமும், கவலையும் இந்த மாதம் விலகும். உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தால் நீங்கள் மகிழ்ச்சியில் திளைக்கலாம். வியாபாரத்தில் புதிய திட்டங்களை தீட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு, உங்களின் இந்த திட்டங்கள் உங்களுக்கு வெற்றியையும் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
