Latest Updates
-
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க..
Diwali Horoscope 2023: வருகிற தீபாவளியில் இருந்து இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை பிரகாசமாக இருக்கப் போகுது..
Diwali Horoscope 2023 In Tamil: ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசை நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி வருகிறது. இந்த தீபாவளி நாளில் செல்ல செழிப்பிற்கான லட்சுமி பூஜைகள் செய்யப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக, வாழ்வில் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கப் போகிறது. இதற்கு கிரகங்களின் நிலைகள் தான் முக்கிய காரணம்.

அதுவும் தீபாவளிக்கு முன்னரே ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ராகு, கேது, சனி ஆகிய மூன்று கிரகங்களுமே ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்களாகும். மேலும் இந்த மூன்று கிரகங்களும் பாவ மற்றும் கொடூரமான கிரகங்களாக கருதப்படுகின்றன.
என்ன தான் கொடிய கிரகங்களாக இருந்தாலும், உண்மையில் இந்த கிரகங்கள் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப தான் பலன்களை வழங்கும். இப்போது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான 2023 ஆம் ஆண்டிற்கான தீபாவளி ராசிப்பலன்களைக் காண்போம்.
மேஷம்
ஏற்கனவே ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு சென்றுவிட்டார். மேலும் சனியும் வக்ர நிவர்த்தி அடைந்துவிட்டார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. அனைத்து வேலைகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வருகிற தீபாவளி மங்களகரமானதாக இருக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆனால் கடினமாக உழைத்தால் மட்டுமே தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியைக் காண முடியும். முக்கியமாக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
தீபாவளி பண்டிகையானது மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நன்றாக இருக்கும். இருப்பினும், குடும்ப உறுப்பினர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு தீபாவளி பண்டிகையன்று சனி பகவானின் சிறப்பான அருள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த தீபாவளியானது சிறப்பான பலன்களை வழங்கும். வியாபாரிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
சிம்மம்
தீபாவளி பண்டிகையானது சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண விஷயத்தில் அதிக கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும்.
கன்னி
தீபாவளி அன்று சனி மற்றும் புதனின் அருளால் கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த தீபாவளி பண்டிகையில் நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். ஆனால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயம் உறவுகள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளியில் மன அமைதி கிடைக்கும். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளதால், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானின் அருளால் இந்த தீபாவளியில் நல்ல பெயரையும், புகழையும் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
மகரம்
சனி பகவான் மற்றும் புதனின் அருளால் மகர ராசிக்காரர்கள் தீபாவளியில் இருந்து நல்ல பலன்களைப் பெறுவார்கள். வழக்கத்தை விட நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக பெயர், புகழ், கௌரவம் போன்றவை தீபாவளியில் இருந்து அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளியால் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் பெரிய விஷயங்களை செய்து சாதிப்பார்கள். சனி பகவான் மற்றும் லட்சுமி தேவியின் அருளால் தீபாவளியில் இருந்து வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளியில் சனி பகவான் மற்றும் குரு பகவானின் ஆசியால் நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மரியாதையும், புகழும் அதிகரிக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications