Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
தீபாவளி நாளில் லட்சுமி கணேச சிலைகளை வாங்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா கஷ்டம் அதிகரிக்கும்..
Diwali 2023: இந்துக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடும் ஒரு பண்டிகை தான் தீபாவளி பண்டிகை. இந்நாளை தீப ஒளித்திருநாள் என்றும் அழைப்பர். இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக இது வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக தமிழகத்தில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி வருகிறது.

இந்நாளில் ஒவ்வொரு வீடும் விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதோடு, பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுவர். இன்னும் சிலர் இந்நாளில் செல்வ செழிப்பான வாழ்க்கைக்கு லட்சுமி தேவி மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவார்கள்.
இப்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செய்யப்படும் பூஜைக்கு லட்சுமி கணேச சிலையை வாங்கும் போது ஒருசில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இப்போது லட்சுமி மற்றும் விநாயகர் சிலையை வாங்கும் போது எந்தமாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
ஒரே சிலையை வாங்காதீர்கள்
தீபாவளி அன்று லட்சுமி விநாயகர் பூஜைக்காக லட்சுமி விநாயகர் சிலைகளை வாங்குவது வழக்கம். நீங்கள் உங்கள் வீட்டில் இந்த பூஜைகளை செய்வீர்களானால், லட்சுமி மற்றும் விநாயகர் சிலைகளை ஒன்றாக வாங்காமல் தனித்தனியாகத் தான் வாங்க வேண்டும்.
விநாயகர் சிலையை வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
தீபாவளி நாளில் விநாயகர் சிலையை வாங்கும் போது குறிப்பிட்ட விஷயங்களை கவனித்து வாங்க வேண்டியது முக்கியம். முதன்மையாக விநாயகர் சிலையில் விநாயகரின் துதிக்கை இடது புறத்தில் இருக்க வேண்டும். மேலும் விநாயகர் மூஞ்சிறு வாகனத்தின் மீது அமர்ந்து, கையில் மோதகம், லட்டு போன்றவற்றை வைத்திருக்குமாறு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விநாயகர் சிலையை வாங்கினால் மட்டும் தான் நல்ல பலன்கள் கிடைக்கும்.
லட்சுமி சிலையை வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
லட்சுமி சிலையை வாங்கும் போது, லட்சுமி தேவி அவரது வாகனமான ஆந்தையின் மீது சவாரி செய்யுமாறான சிலையை வாங்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதோடு லட்சுமி தேவி நின்ற நிலையில் இருக்கும் சிலையையும் வாங்கக்கூடாது.
லட்சுமி தேவியின் இந்த மாதிரியான நிலைகள் அவர் புறப்பட தயாராக இருப்பதைக் குறிக்கிறது. எனவே எப்போது தாமரை மலரில் பாதடக்ள் தெரியாத வகையில் அமர்ந்திருக்கும் சிலையைத் தான் வாங்க வேண்டும். இப்படியான லட்சுமி தேவியின் நிலை தான் குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
