Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்க ராசிப்படி தீபாவளிக்கு எந்த நிற ட்ரெஸ் போட்டா அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும் தெரியுமா?
Diwali 2023: தீபாவளி என்பது உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் சுற்றுப்புறத்திலும் உற்சாகத்தையும், வெளிச்சத்தையும் ஏற்படுத்தும் திருவிழாவாகும். இந்த தீபாவளிக்கு என்ன அணிய வேண்டும் என்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றால், உங்களின் ராசி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் பிறந்த ராசியின் அடிப்படையில் இந்த தீபாவளிக்கு நீங்கள் என்ன நிற ஆடைகளை தேர்வு செய்தால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இந்த வண்ணம் உங்களுக்கு சிறந்த தோற்றத்தைக் கொடுப்பதோடு அனைவரின் கவனத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கும். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் உடனடியாக உங்களை உற்சாகப்படுத்தும். இந்த தீபாவளிக்கு நீங்கள் ஆடை வாங்கும் போது சிவப்பு நிறத்தில் வாங்க மறந்து விடாதீர்கள்.
ரிஷபம்
நீலம் ஒரு நடுநிலை நிறமாகும், இது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது. நீங்கள் ஒரு நீல நிற உடையை அணியத் தேர்வுசெய்து, தீபாவளியில் உங்கள் உற்சாகத்தையும், அதிர்சத்தையும் ஒளிரச்செய்யும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் மகிழ்ச்சியான ஆளுமையை வெளிக்கொணரும் வகையில் தீபாவளிக்கு மிளிரும் மற்றும் மினுமினுப்பு சேர்க்கும் துடிப்பான ஆரஞ்சு நிற ஆடைகளை நீங்கள் வாங்க அணிய வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், எனவே அவர்கள் அர்த்தமுள்ள ஆடைகளை அணிய விரும்புகிறார்கள். பச்சை என்பது இயற்கையை குறிக்கிறது மற்றும் அவர்கள் இயற்கையை நேசிக்கும் மக்கள் என்பதால், மகிழ்ச்சியை பிரதித்துவப்படுத்தும் இந்த பண்டிகையில் நீங்கள் பச்சை நிற ஆடை அணிவது நல்லது.
சிம்மம்
சூரியனைப் போல பிரகாசமான சிம்ம ராசிக்காரர்கள், தங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்த ஆடைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் சில நேரங்களில் தைரியமாகவும், ஆடம்பரமாகவும், கம்பீரமாகவும் இருக்கும். இந்த பண்டிகைக் காலத்தில் நீங்கள் அணிய வேண்டிய நிறம் பிரவுன்.
கன்னி
கம்பீரமான மற்றும் அடக்கமான இந்த ராசிக்காரர்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்த விரும்புவார்கள். எனவே கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல நகைகளுடன் சேர்த்து அணிவதற்கு இந்த தீபாவளியில் வெள்ளை நிறமே சிறந்த தேர்வாகும்.
துலாம்
ஆடைக்கு வரும்போது துலாம் பெரும்பாலும் பெண்பால் நிறங்களை விரும்புவார்கள். இந்த தீபாவளிக்கு அவர்களின் பாரம்பரிய ரசனைக்கு ஏற்ற நிறமாக மஞ்சள் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வலிமையான, அடர்த்தியான மற்றும் ஆடம்பர நிறங்களில் ஆடை அணிவதை விரும்புகிறார்கள். இந்த தீபாவளிக்கு அவர்களுக்கு மெரூன் நிற ஆடைகள் பொருத்தமானதாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பெரும்பாலும் நிழற்படங்கள், பளபளப்பான மற்றும் கம்பீரமான நிறங்களில் ஆடை அணிய ஈர்க்கப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஊதா நிற ஆடைகள் தீபாவளிக்கு ஏற்றதாக இருக்கும்.
மகரம்
பொதுவாக கருப்பு நிறம் தீபாவளியின் போது தவிர்க்க வேண்டிய நிறமாக கருதப்படுகிறது. ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு தீபவாளியில் இந்த நிறம் உற்சாகத்தை அளிக்கும் நிறமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள் மற்றும் எதார்த்தமானவர்கள். சாம்பல் நிறமானது நடுநிலை மற்றும் சமநிலையைக் குறிக்கிறது. இந்த தீபாவளியில் இந்த ராசிக்காரர்களுக்கு சாம்பல் நிறம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
மீனம்
நுட்பமான, நிதானமான, கண்ணைக் கவரும் நிறமான பிங்க் மீன ராசிக்காரர்களுக்கு பொருத்தமான நிறமாக இருக்கும். இது அவர்களின் தனித்துவத்தை அனைவருக்கும் உணர்த்துவதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
