Latest Updates
-
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்!
விண்வெளியில் சாப்பிட்ட முதல் மனிதர் யார்? அவர் சாப்பிட்ட முதல் உணவு என்ன தெரியுமா? இதையா சாப்பிட்டாங்க...!
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மனிதர்கள் விண்வெளிக்கு பயணம் செய்து வருகின்றனர். விண்வெளி என்பது மனிதர்களுக்கு எப்போதும் ஆர்வத்தைத் தூண்டும் விஷயமாகும். கோள்கள், நட்சத்திரங்கள், ப்ளாக் ஹோல் மற்றும் விண்மீன் கூட்டம் பற்றிய உண்மைகள் எப்போதும் மக்களை கவர்ந்திழுக்கும் விஷயமாக இருந்து வருகின்றன.
விண்வெளிப் பயணம் எப்போதும் மனிதகுலத்திற்கு சாகசத்திற்கும் ஆச்சரியத்திற்குமான ஒரு ஆதாரமாக இருந்து வருகிறது. பூமியில் வாழும் வாழ்க்கைக்கும், விண்வெளியில் வாழும் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பூமியில் நாம் பூமியில் மனிதர்கள் செய்யும் எதையும் விண்வெளியில் அப்படியே செய்து விட முடியாது. அதற்கு புவி ஈர்ப்பு விசை முதல் மின்காந்தப்புலம் வரை பல காரணங்கள் உள்ளது.

விஞ்ஞானம் பெரிய அளவுக்கு வளர்ந்துள்ள இந்த காலத்திலேயே மனிதர்களால் விண்வெளியில் சகஜமான வாழ்க்கை வாழ முடியாத போது அரை நூற்றாண்டுக்கு முன் விண்வெளி வீரர்களின் வாழ்க்கை விண்வெளியில் எப்படி இருந்திருக்கும். குறிப்பாக அவர்கள் அங்கு என்ன சாப்பிட்டிருப்பார்கள்? அஅதன் சுவை எப்படி இருந்திருக்கும்? இதற்கான பதில்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விண்வெளியில் சாப்பிட்ட முதல் உணவு எது?
நாசாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஏப்ரல் 12, 1961 அன்று, சோவியத் விண்வெளி வீரர் யூரி ஏ. ககாரின் வோஸ்டாக் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதராக வரலாற்றைப் படைத்தார். 'பூமியைச் சுற்றி அவர் ஒற்றை சுற்றுப்பாதையில் பயணித்தபோது, அலுமினியக் குழாயிலிருந்து மாட்டிறைச்சி மற்றும் ஈரல் பேஸ்ட்டை வாயில் பிழிந்து, விண்வெளியில் சாப்பிட்ட முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்' என்று நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் சாப்பிட்ட முதல் மனிதர் யார்?
1961 ஆம் ஆண்டில், சோவியத் விண்வெளி வீரரான யூரி ககாரின், பூமிக்கு வெளியே விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ஆனார். வோஸ்டாக் 1 விண்கலத்தில் யூரி ககாரின் மேற்கொண்ட பயணம் 108 நிமிடங்கள் நீடித்தது. Space.com இன் படி, 1961 ஆம் ஆண்டில் வோஸ்டாக் 1 விண்கலத்தில் பூமியைச் சுற்றி வந்தபோது யூரி விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் ஆனார். இந்த குறுகிய பயணத்தின் போது, அவர் மனித வரலாற்றின் மைல்கல்லை உருவாக்கினார், மேலும் யூரி ககாரின் விண்வெளியில் சாப்பிட்ட முதல் நபர் ஆனார்.
யூரி ககாரின் விண்வெளியில் எப்படி உணவை சாப்பிட்டார்?
யூரி ககாரினுக்கு சாப்பிட வழங்கப்பட்ட முதல் விண்வெளி உணவு, அதுவரை அவர் சாப்பிட்ட எந்த உணவையும் போலல்லாமல் இருந்தது. உண்மையில், அவரது முதல் விண்வெளி உணவில் இரண்டு குழாய்கள் இருந்தன, ஒன்று மாட்டிறைச்சி மற்றும் கல்லீரல் பேஸ்ட் மற்றும் மற்றொன்று சாக்லேட் சாஸுடன். அவர்கள் அதை நேரடியாக தங்கள் வாயில் பிழிய வேண்டியிருந்தது.
உணவு ஏன் திரவ வடிவில் இருந்தது?
இந்த உணவு பற்பசை போன்ற குழாயில் ஏன் இருந்தது? அந்த நேரத்தில், விஞ்ஞானிகள் கடக்க வேண்டிய மிகப்பெரிய தடையாக இருந்தது புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் எப்படி சாப்பிடுவது என்பதாக இருந்தது. சாதாரண உணவு துண்டுகள் மிதந்து மூச்சுக்குழாயில் கூட சிக்கிக் கொள்ளும். எனவே முதல் விண்வெளி உணவிற்கான யோசனை முற்றிலும் பேஸ்ட் மற்றும் திரவத்தால் வடிவமைக்கப்பட்டது.
சுவையில் மாற்றம் இருந்ததா?
பூமிக்கு திரும்பிய பின்னர், யூரி ககாரின் உணவு சாதாரணமானதாக இருந்தது என்றும், சுவையில் தனக்கு எந்த குறிப்பிட்ட பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், முற்றிலும் மாறுபட்ட பேக் மற்றும் சாப்பிடும் முறை காரணமாக, இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இது விண்வெளியில் மனிதர்கள் உணவை உட்கொள்ள முடியும் என்பதை நிரூபித்த வெற்றிகரமான பரிசோதனையாக இருந்தது.



Click it and Unblock the Notifications

