Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
தீபாவளிக்கு முன் வரும் தந்தேராஸில் உங்க ராசிக்கேற்ற பொருட்களை வாங்குங்க.. வாழ்வில் பணக்கஷ்டமே வராது..!
Dhanteras 2023: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையானது ஒரு நாள் தான் கொண்டாடப்படுகிறது. ஆனால் வட இந்தியாவை எடுத்துக் கொண்டால் 5 நாட்கள் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. அதில் முதல் நாள் தான் தந்தேராஸ் அல்லது தனத்திரயோதசி நாளாகும்.
இந்நாளில் தன்வந்திரி பகவான் வணங்கப்படுவதோடு, லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் வீட்டில் எப்போதும் பணம் நிறைந்திருக்கும்.

இது தவிர தனத்திரயோதசி நாளின் இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைக்கப்படும். இந்த விளக்கு எமதீபம் என்று அழைக்கப்படுகிறது. அதோடு இந்த தந்தேராஸ் நாளில் எந்த பொருட்களை வாங்குகிறோமோ, அது ஆண்டு முழுவதும் வீட்டில் பெருகி இருக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு இப்படிப்பட்ட தந்தேராஸ் நாளானது நவம்பர் 10 ஆம் தேதி வருகிறது. இந்நாளானது ஒருவர் தங்கம், வெள்ளி, வீடு, வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்க மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
ஆனால் தந்தேராஸ் நாளில் ஒருவர் தங்களின் ராசிக்கேற்றவாறு பொருட்களை வாங்கினால், லட்சுமி தேவிமற்றும் குபேரனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதோடு, ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் மற்றும் பணத்தட்டுப்பாடு நீங்கும். இப்போது தந்தேராஸ் நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் வெள்ளி ஆபரணங்கள், நாணயங்கள் அல்லது பாத்திரங்களை வாங்குவது மிகவும் நல்லது. இது தவிர தங்கம் அல்லது பித்தளை பொருட்களையும் வாங்கலாம். இப்படி வாங்குவதால் செல்வம் பெருவதோடு, நல்ல முன்னேற்றத்தையும் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் வெள்ளி பொருட்களை வாங்குவது நல்லது. இது தவிர வைர நகைகளையும் வாங்குவது நல்லது. எனவே பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் வெண்கலப் பொருட்கள், தங்கம் போன்றவற்றை வாங்குவது நல்ல பலனைத் தரும். மேலும் இவர்களுக்கு ஏற்ற ரத்தினம் மரகதம். இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்குவது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். எனவே இந்த கடக ராசிக்காரர்கள் வெள்ளி ஆபரணங்கள், வெள்ளி லட்சுமி கணேச சிலை, வெள்ளி யந்திரம், முத்து நெக்லேஸ், வெள்ளி மோதிரம் என வெள்ளி பொருட்களை வாங்குவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசியை சேர்ந்தவர்கள் தந்தேராஸ் நாளில் தங்கம் வாங்குவது மிகவும் நல்லது. இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கல் ரூபி. ஒருவேளை உங்களால் தங்கம் வாங்க முடியாவிட்டால், தங்கம் முலாம் பூசப்பட்ட பொருட்களை வாங்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் வெண்கவம் அல்லது பூந்தொட்டிகளை வாங்குவது நல்லது. இப்படி வாங்குவதன் மூலம் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் புதன் பலப்படும். மேலும் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கல் மரகதம் மற்றும் முத்து. இவற்றை வாங்குவதன் மூலமும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தந்தேராஸ் நாளில் வெள்ளி நகைகள், வெள்ளி பாத்திரங்களை வாங்குவது நல்லது. இப்படி வாங்கும் போது வீட்டில் செல்வம் பெருகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் தனத்திரயோதசி அல்லது தந்தேராஸ் நாளில் செம்பு பாத்திரங்கள், வெள்ளி நகைகள் அல்லது பாத்திரங்களை வாங்குவது நல்லது. இதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு. இந்த ராசியை சேர்ந்தவர்கள் தந்தேராஸ் நாளில் தங்க நகைகள், தங்க நாணயங்கள், பித்தளை பாத்திரங்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இப்படி வாங்குவதன் மூலம், வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு எந்த ஒரு பஞ்சமும் இருக்காது.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி. இந்த மகர ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் இரும்பு பொருட்கள் அல்லது வாகனம் போன்றவற்றை வாங்குவது நல்லது. இப்படி வாங்கினால் ஆண்டு முழுவதும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி. இந்த கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் தந்தேராஸ் நாளில் இரும்பு தொடர்பான பொருட்கள் அல்லது வாகனங்களை வாங்குவது நல்லது. இது தவிர தங்கம், வெள்ளி போன்றவற்றையும் வாங்கலாம்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு. இந்த மீன ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் தங்கம் அல்லது பித்தளை பொருட்களை வாங்குவது, வாழ்வில் செழிப்பைத் தரும். மேலும் இந்த வகையான பொருட்களை வாங்குவது ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications