Latest Updates
-
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும்
59 ஆண்டுகளுக்கு பின் தீபாவளிக்கு முன் நிகழும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு நிறைய பணம் கிடைக்கப்போகுது...
Dhanteras 2023: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் முதல் நாள் தான் தந்தேராஸ். இந்த தந்தேராஸ் என்னும் தனத்திரயோதசி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்யப்படுவதோடு, அந்நாளின் இரவு முழுவதும் எமதீபம் ஏற்றப்படுகிறது.
மேலும் தந்தேராஸ் நாளானது மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கினால், ஆண்டு முழுவதும் இது பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டின் தந்தேராஸ் நாளானது நவம்பர் 10 ஆம் தேதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் தந்தேராஸ் நாளானது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஏனெனில் இந்நாளில் பல கிரகங்களின் நிலை 59 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போன்று உள்ளதாக கூறப்படுகிறது. அதில் குரு மேஷ ராசியிலும், சுக்கிரன் கன்னி ராசியிலும், சூரியன் துலாம் ராசியிலும் உள்ளனர். அதோடு சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் இருந்து சச யோகத்தையும் உருவாக்கியுள்ளார். மேலும் குரு பகவானின் 7 ஆவது பார்வை சூரியனின் மேல் விழுகிறது.
இப்படியான கிரகங்களின் நிலை தந்தேராஸ் நாளில் நிகழ்ந்துள்ளதால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தந்தேராஸ் நாளில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் மற்றும் அதனால் நல்ல பண வரவையும் பெறக்கூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் மேற்கொள்ளும் புதிய விஷயங்கள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தருவதாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களும் நல்ல அதிர்ஷ்டசாலிகள். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பண பிரச்சனைகள் இக்காலத்தில் தீரும். நிதி நிலை வழவாகும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications