Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்!
கும்பத்தில் உருவாகும் தனசக்தி ராஜயோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகுதாம்...!
ராஜயோகம் என்பது ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் வெவ்வேறு விதங்களில் தொடர்புடையது. பெரும்பாலும் ராஜயோக பலன்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். ஜோதிடத்தில், கிரகங்கள் மற்றும் ராசிகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையையும் பாதிக்கின்றன. ஒரு கிரகத்தின் இயக்கம் அதனுடன் தொடர்புடைய அனைத்து ராசியினரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது.
இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் பலனாக சுப, அசுப பலன்கள் உண்டாகும். இது கிரகங்களின் இயக்கம் மற்றும் மாறும் ராசியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் சில கிரக மாற்றங்கள் அனுகூலமான மாற்றங்களுடன் வருகின்றன. அதில் உள்ள இரண்டு கிரகங்கள் சுக்கிரன் மற்றும் செவ்வாய். சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்த தனசக்தி ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு அற்புத பலன்களை அளிக்கப்போகிறது.

சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் எந்த நிலையிலும் நல்ல அனுபவங்களைத் தருகிறார். சுக்கிரன் அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும், அழகையும் தருகிறார். மார்ச் 7 முதல் சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசித்து மார்ச் 31 சனிக்கிழமை வரை இதே நிலையில் இருக்கிறார். அதே சமயம் செவ்வாயும் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளது. செவ்வாய் சுக்கிரன் ஒன்றாக சஞ்சரிப்பதால் தனசக்தி ராஜயோகம் உண்டாகும். இது நான்கு ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை தரப்போகிறது.
மேஷம்
தனசக்தி ராஜயோகத்தின் பலனாக மேஷ ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டமான காலக்கட்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் வணிகங்கள் பெரும்பாலும் எதிர்பாராத நிதி ஆதாயங்களைக் கொண்டு வரும். வெற்றிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும், அதன் மூலம் வாழ்க்கை மேம்படும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கிறது மற்றும் நிதி நெருக்கடிகள் முற்றிலும் மறைந்துவிடும். திருமணமானவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கையால் தனசக்தி ராஜயோகம் நல்ல பலன்களைத் தருகிறது. அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கிறது மற்றும் அதன் மூலம் சிறந்த பலன்களைப் பெற முடியும். தொழில் துறையில் முன்னேற பல வாய்ப்புகள் அமையும். அவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்டால் பெரிய வெற்றியைப் பெறலாம்.
வியாபாரத்தில் லாபம் உங்களை ஆச்சரியப்படுத்தும். நிதி நிலைமை நீங்கள் நினைத்து பார்த்ததை விட வலுவாக இருக்கும். லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு சாதகமான பலன்களை உருவாக்கும். வீடு, சொத்து வாங்குதல் போன்றவற்றை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
தனசக்தி ராஜயோகம் மிதுன ராசியினருக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் மாற்றங்கள் நீங்கள் இதுவரை அனுபவிக்காத நேர்மறை மாற்றங்களாக இருக்கும். நிதி விஷயங்களில் உங்களுக்கு எந்த வித சிரமமும் இருக்காது.
வெற்றி உங்களுக்கு பல்வேறு வழிகளில் இருந்து வரும். பணம் சம்பாதிப்பதிலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதிய நேரத்தையும், வாய்ப்பையும் கண்டுபிடிப்பீர்கள், அது உங்கள் வாழ்க்கையை மாற்றும். வெளிநாடு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
மகரம்
மகர ராசியினருக்கு செவ்வாய் - சுக்கிரன் இணைவு சாதகமான பலன்களைத் தரும். இதன் விளைவாக, தன சக்தி ராஜயோகம் உங்களுக்கு செல்வத்தை அதிகரிக்கிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும். திருமண உறவில் அனைத்திலும் துணையுடன் அனுசரித்துச் செல்ல வாய்ப்பு உண்டு.
முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் நீங்கள் நினைப்பதை விட நிதிரீதியாக அதிக பலனளிக்கும். வாழ்க்கையின் பல மூலைகளிலும் சிறந்த மாற்றங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. உங்கள் துணையுடனான உறவு உங்களுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
